• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இது எதிர்பார்த்த ஒன்றே...! அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து இந்தியா ரியாக்‌ஷன்

இது எதிர்பார்த்த ஒன்றே...! அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து இந்தியா ரியாக்‌ஷன்

கோப்புப்படம்

கோப்புப்படம்

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், GSP ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தால், 4,800 பொருட்களை எந்த ஒரு வரியும் இல்லாமல் அங்கு இறக்குமதி செய்துகொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய பொருட்கள் இறக்குமதி மீதான சலுகையை அமெரிக்கா நீக்கும் என்ற அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க அரசு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ஜூன் 5-ம் தேதி முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

    மேலும் படிக்க: இந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை நிறுத்தும் அமெரிக்கா...! என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

    இது குறித்து இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளது.

    மேலும், இருநாடுகள் இடையில் சுமுகமான முறையில் வர்த்தகம் செய்ய இந்தியத் தரப்பிலிருந்து தீர்வுகள் வழங்கப்பட்டது. அதில் இருநாடுகளுக்கு நல்ல பயன் இருந்தது.

    ஆனால் அவற்றை அமெரிக்க அரசு ஏற்காதது வருத்தம் அளிப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: