முகப்பு /செய்தி /வணிகம் / பத்தாண்டுகளில் சராசரி வனப்பகுதி அதிகரிப்பில் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடம்..!

பத்தாண்டுகளில் சராசரி வனப்பகுதி அதிகரிப்பில் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடம்..!

பொருளாதார ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை

Economic Survey 2022-23 | 2021 இல் மட்டும் சதுப்புநிலப் பரப்பில் 364 சதுர கி.மீ அதிகரித்திருப்பதை  பொருளாதார ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தூய்மையான எரிசக்தி மாற்றங்களைக் கையாளும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளதுடன், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில் செவ்வனே செயல்பட்டு வருவதாக நேற்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் நேற்று 2022-23 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. விவசாயம், குறுதொழில்,  பெரு நிறுவனங்கள், எரிசக்தி, நாட்டில் பல்வேறு வளங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த பட்டியலில் வனம்  மற்றும் வனம் சார்த்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வரிசைப்படுத்த்தப்பட்டிருந்தன. 2010 மற்றும் 2020 க்கு இடையில் சராசரி ஆண்டு வனப் பகுதியில் நிகர ஆதாயத்தைப் பொறுத்து உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது என்று குறிப்பிட்டனர். தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களின் பசுமை இந்தியா இயக்கம் (ஜிஐஎம்), இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை, வலுவான கட்டமைப்பு மற்றும் கொள்கைகளால் கணக்கெடுப்புமற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) போன்றவை தான் இந்த வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்ததாக கோடிட்டு காட்டியுள்ளனர். 

இந்திய மாநிலங்களில், அருணாச்சல பிரதேச காடுகள் அதிகபட்ச கார்பன் இருப்பைக் கொண்டுள்ளது. அதே போல  விகிதாசார அடிப்படையில் ஜம்மு & காஷ்மீர்  காடுகள் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 173.41 டன் கார்பன் கையிருப்பை கொண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

அதேபோல ஈரநிலங்களை(wetlands) எடுத்துக்கொண்டால்  இந்தியாவில் இப்போது 13.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில்  75 ராம்சார் ஈரநிலங்கள் உள்ளன. 2021 இல் மட்டும் சதுப்புநிலப் பரப்பில் 364 சதுர கி.மீ அதிகரித்திருப்பதை  பொருளாதார ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2023 க்குள் அடைய வேண்டிய ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை (Climate Action)இ தண்ணீருக்கு கீழே உள்ள உயிரினங்களின் வாழ்க்கை (Life Below Water) நிலத்தில் வாழும் உயிர்களுக்கான வாழ்க்கை (Life on Land) ஆகிய இலக்குகளை அடைய நாடு கடந்த சில ஆண்டுகளாக அதிக முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தான் கடந்த பத்தாண்டுகளில் சராசரி வனப்பகுதி அதிகரிப்பு என்பது  அதிகரித்து உலக அளவில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை  சுட்டுகிறது.

First published:

Tags: Nirmala Seetharaman, Union Budget 2023