முகப்பு /செய்தி /வணிகம் / அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வை ஜூன் 16 வரை ஒத்திவைத்த இந்தியா!

அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வை ஜூன் 16 வரை ஒத்திவைத்த இந்தியா!

மோடி, டிரம்ப்

மோடி, டிரம்ப்

இந்த வரி உயர்வு முடிவைச் செப்டம்பர் 18 வரை ஒத்திவைத்துவிட்டு இரு நாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் 29 பொருட்கள் மீதான வரி உயர்வு அறிவிப்பை, ஜூன் 16-ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கான வரியை 25 சதவீதம் வரை அதிகரித்தனர்.

இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் பாதித்தது.

உடனே நாங்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான வரியை 2018 ஆகஸ்ட் 4 முதல் உயர்த்த இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

பின்னர் இந்த வரி உயர்வு முடிவைச் செப்டம்பர் 18 வரை ஒத்திவைத்துவிட்டு இரு நாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வரை இந்த வரி உயர்வை இந்தியா அமலுக்குக் கொண்டு வரவில்லை. தற்போது ஜூன் 16-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த இறக்குமதி வரி உயர்வு அமலுக்கு வந்தால் 230 மில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்காவின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

First published:

Tags: Import duty, Import tax