ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்த மாதம் முதல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் வந்திருக்கும் முக்கிய மாற்றம்!

இந்த மாதம் முதல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் வந்திருக்கும் முக்கிய மாற்றம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

நாட்டில் உள்ள பல்வேறு டெபாசிட்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது.

  2022-23ம் நிதியாண்டுக்கான சிறுசேமிப்பு வட்டி குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த வட்டி உயர்வு அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் கிசான் விகாஸ் பத்ரா வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 30 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தி வருவதால், நாட்டில் உள்ள பல்வேறு டெபாசிட்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

  வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

  சிறு சேமிப்புத் திட்டங்கள்:

  குடிமக்களுக்கு தொடர்ந்து சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சேமிப்பு திட்டங்களில் சேமிப்பு வைப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் சேமிப்பு வைப்பு திட்டங்களில் போஸ்ட் ஆபீஸில் செயல்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் அடங்கும். தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்றவை. சமூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும். மாதாந்திர வருமானத் திட்டத்தில் மாதாந்திர வருமானக் கணக்கு சேர்க்கப்படும்.

  ஒரு தனி மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது? விடை இதோ!

  கிசான் விகாஸ் பத்ரா , மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டம் மற்றும் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான கால வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, 10-30 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளது.

  சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் என்ன?

  அஞ்சலக சேமிப்பு வைப்புகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும். 1 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீத வட்டி தொடர்ந்து வழங்கப்படும். 2 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கான வட்டி 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு தற்போது 5.7 சதவீதமாக உள்ளது, மேலும் 3 ஆண்டு காலத்திற்கான வட்டி 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.8 சதவீதமாக உள்ளது. ஐந்தாண்டு கால டெபாசிட்கள் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வருமானம் தரும். ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கும்.

  தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குகளுக்கு 6.8 சதவீதம் மற்றும் 7.6 சதவீதம் வட்டி. PPFக்கான வட்டி விகிதமும் மாறாமல் 7.1 சதவீதமாக உள்ளது. கிசான் விகாஸ் பத்ராவுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் காலளவு இரண்டையும் அரசாங்கம் திருத்தியுள்ளது. 124 மாத முதிர்வு காலத்திற்கான முந்தைய 6.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இப்போது 123 மாத முதிர்வு காலத்திற்கு 7 சதவீதத்தை வழங்குகிறது.மாதாந்திர வருமானக் கணக்கு ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டிக்கு மாறாக 6.7 சதவீதத்தை வழங்குகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Post Office, Savings