• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரூ. 95 கட்டினால் 14 லட்சம் கிடைக்குமாம்! இப்படியொரு ஸ்கீம் போஸ்ட் ஆபீஸில் இருப்பது தெரியாம போச்சே!

ரூ. 95 கட்டினால் 14 லட்சம் கிடைக்குமாம்! இப்படியொரு ஸ்கீம் போஸ்ட் ஆபீஸில் இருப்பது தெரியாம போச்சே!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும் மற்றும் முதிர்வு காலத்தில் ரூ. 9.52 லட்சம் ஒன்றாக வழங்கப்படும்.

  • Share this:
    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களில் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டமும் ஒன்று. இதுவரை இதுக் குறித்து தெரிந்து கொள்ளாதவர்கள் இன்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் பணத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கும் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டம் 1995 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ .95 முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் நீங்கள் ரூ .14 லட்சத்தைப் பெறலாம். அதே போல் இந்தத் திட்டத்தின் கீழ், தபால் அலுவலகம் 6 வெவ்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.இந்த திட்டமானது
    அவ்வப்போது பணம் தேவை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் ரூ. 10 லட்சம் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு திரும்ப வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்த நபர் ஒருவேளை இறந்தால், அவரின் நாமினிக்கு மீதி காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் தொகை சேர்த்து வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் 2 வகைகள் உள்ளன. 15 ஆண்டு கால திட்டம் மற்றும் 20 ஆண்டு கால திட்டம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.இந்த இந்த திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில், 15 ஆண்டு கால சேவிங்ஸில் 6, 9 மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20% பணம் திரும்பக் கிடைக்கும். இதில் மீதமுள்ள 40% பணம் போனஸ் உடன் மொத்தமாக திட்டம் முடிவடைந்த பின்பு கொடுக்கப்படும். அதேபோல, 20 ஆண்டு கால சேவிங்ஸில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20 சதவிகிதம் பணம் கிடைக்கும். மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் போனஸுடன் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் 15 ஆண்டு கால சேவிங்ஸில் சேர அதிகப்பட்ச வயது 45. 20 ஆண்டு கால சேவிங்ஸை தேர்ந்தெடுத்தால் அதிகப்பட்ச வயது 40. இதில் காலாண்டு பிரீமியம் ரூ .8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியம் ரூ .16,715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 ஆகும்.இந்த திட்டம் 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ .13.72 லட்சம் தொகையை வழங்குகிறது. இதில், 4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும் மற்றும் முதிர்வு காலத்தில் ரூ. 9.52 லட்சம் ஒன்றாக வழங்கப்படும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால் போதும் 14 லட்சத்திற்கு அதிபதியாகலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: