ஹோம் /நியூஸ் /வணிகம் /

வெறும் ரூ.399க்கு 10 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டம்..! - அசத்தும் பிரபல வங்கி

வெறும் ரூ.399க்கு 10 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டம்..! - அசத்தும் பிரபல வங்கி

இன்சூரன்ஸ் திட்டம்

இன்சூரன்ஸ் திட்டம்

பொதுமக்கள் மிக எளிதான முறையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என அஞ்சல் துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரூ.399க்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் பலருக்கும் இதுகுறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கப்படாமல் உள்ளன. அதனால் மிடில் கிளாஸ் மக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் இன்றுவரை முழுமையாக சென்று சேரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு முடிந்த வரை இந்த இன்சூரன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

  Fixed deposit: வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்! டெபாசிட் செய்ய இதுதான் சரியான டைம்

  இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மக்களுக்கு அனைத்து விதமான நிதி சேவைகளையும் வழங்குகிறது. சேமிப்பு கணக்கு தொடங்கி அனைத்து விதமான நிதி சார்ந்த வசதிகளும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை மூத்த குடிமக்களுக்கு ஹோம் சர்வீஸ் வசதியும் உண்டு.அந்த வகையில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வெறும் ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டை பெறலாம். 18 முதல் 65வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

  வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி!

  இந்த காப்பீட்டின் மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும். பொதுமக்கள் மிக எளிதான முறையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் இதுக் குறித்து தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Insurance, Post Office