Home /News /business /

சாமானிய மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ...எந்த வங்கியில் கிடைக்கும்? முழு விபரம்!

சாமானிய மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ...எந்த வங்கியில் கிடைக்கும்? முழு விபரம்!

விபத்து காப்பீடு

விபத்து காப்பீடு

ரூ.10 லட்சம் மதிப்பிலான இந்த காப்பீட்டின் மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சாமானிய மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.. இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி அறிமுகம் செய்து இருக்கும் இந்த திட்டம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

    அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மக்களுக்கு அனைத்து விதமான நிதி சேவைகளையும் வழங்குகிறது. சேமிப்பு கணக்கு தொடங்கி அனைத்து விதமான நிதி சார்ந்த வசதிகளும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை மூத்த குடிமக்களுக்கு ஹோம் சர்வீஸ் வசதியும் உண்டு. இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டிவிட்டது என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அதோடு வாடிக்கையாளர்களின் சேவைகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அரசு வேலை பார்த்த ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வயதில் மட்டும் கூடுதல் பென்ஷன்!

    அந்த வகையில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் ஆண்டுக்கு வெறும் ரூ.399பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டை பெறலாம்.18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் இணைவது மிக மிக சுலபம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

    PM kisan : இன்னும் 4 நாட்களே உள்ளன.. ரூ. 2000 பெற கட்டாயம் இதை செய்துவிடுங்கள்!

    ரூ.10 லட்சம் மதிப்பிலான இந்த காப்பீட்டின் மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும்.இந்த விபத்து காப்பீட்டை எடுப்பதன்மூலம், எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் போது நிதி பிரச்சனையில் இருந்து குடும்பத்தை பாதுகாக்க முடியும். பொதுமக்கள் மிக எளிதான முறையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் ஆன்லைன் தளத்திலும் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Insurance, Savings

    அடுத்த செய்தி