ஹோம் /நியூஸ் /வணிகம் /

சேமிப்பு கணக்கில் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு இந்த ரூல்ஸ் கட்டாயம்!

சேமிப்பு கணக்கில் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு இந்த ரூல்ஸ் கட்டாயம்!

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

கணக்கில் குறைந்தபட்சம் ரூ 500 இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதை கணக்கு வைத்திருப்பவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

  மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த புதிய விதிமுறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் அக்கவுண்ட் வைத்திருக்க்கும் வாடிக்கையாளர் ரூ, 10,000-க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால், அவருக்கு சரிபார்ப்பு அவசியம் (verification need) என்று தெரிவித்துள்ளது. அதாவது அஞ்சலக சேமிப்பு கணக்கில் எந்தவித மோசடிகளும் ஏற்படாதவாறு  தடுக்கும் விதமாக இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  பேங்க் லாக்கரை வாடகைக்கு எடுக்க போறீங்களா? இதை தெரிஞ்சிகிட்டு போங்க

  எனவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்டில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வரம்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வந்திருக்கும் புதிய மாற்றத்தின்படி, இப்போது கணக்கு வைத்திருப்பவர்கள் கிராமின் டக் சேவா கிளையில் ஒரு நாளில் ரூ 20,000 வரை எடுக்கலாம். முன்னதாக, பணம் எடுக்கும் வரம்பு ரூ5,000 ஆக இருந்தது.

  3 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இடம் உண்டா?

  தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில்  வாடிக்கையாளர்களுக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது.இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ 500 இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதை கணக்கு வைத்திருப்பவர்கள் அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ 500க்கு குறைவாக இருந்தால், கணக்கு பராமரிப்பு அபராதமாக ரூ 100 விதிக்கப்ப்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Post Office, Savings