ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஜிஎஸ்டி வசூல்... மூன்றில் இரண்டு பங்கு வரியை செலுத்தும் ஏழை மக்கள்..!

ஜிஎஸ்டி வசூல்... மூன்றில் இரண்டு பங்கு வரியை செலுத்தும் ஏழை மக்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

ஜிஎஸ்டி வசூலில் மூன்றில் இரண்டு பங்கு வரியை ஏழை மக்கள் செலுத்துவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் இந்த நிதியாண்டில் புதிய உச்சமாக 18 லட்சம் கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வசூலில் 3 முதல் 4 சதவீதத்தை மட்டுமே பணக்காரர்கள் செலுத்துவதாகவும்,

40 சதவீத வரித்தொகையை நடுத்தர குடும்பங்கள் செலுத்துவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வசூலில் 64 சதவீதம் ஏழைகளிடம் இருந்து பெறப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் தாங்களுடைய வருவாயில், ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 4 ரூபாயை மட்டுமே ஜிஎஸ்டியாக செலுத்துவதாகவும், அதேவேளையில், ஏழைகள் தங்களின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் வருவாயிலும் 67 ரூபாயை வரியாக செலுத்துவதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, இந்த தரவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி என்பதை கப்பர் சிங் வரி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

First published:

Tags: GST