முகப்பு /செய்தி /வணிகம் / உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக முன்னேறும் இந்தியா - ரிசர்வ் வங்கி அறிக்கை

உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக முன்னேறும் இந்தியா - ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை

உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தி என்ற இலக்கை நோக்கி இந்தியா நகர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச அளவில் சவாலான சூழல் நிலவி வந்தாலும் இந்தியா, உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தி என்ற இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குழப்பங்கள் காரணமாக அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த தாக்கத்தால் சில துறைகள் பாதிப்பை சந்தித்துள்ளது என்றாலும், அதையும் மீறி இந்தியா தனது பலத்தை தக்க வைத்து முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதார சரிவு என்ற சூழல் தென்பட்டாலும், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சிறப்பாக செல்கிறது.

நாட்டின் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது, விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. சர்வதேச வர்த்தக போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இதற்கு காரணம். அதேவேளை, இந்த சிக்கலை சீரமைத்து தேவையை ஈடுகட்டும் பணியில் அரசு உடனடியாக ஈடுபட்டதால் நிலைமை மேம்பட்டுள்ளது. நாட்டின் நடப்பு பற்றாக்குறை என்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொருத்தே அமையும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலர் என்ற விலையில் இருந்தால் நடப்பு பற்றாக்குறை 2.3 சதவீதமாக இருக்கும். அதேவேளை, கச்ச எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலர் என்ற உச்சத்தில் இருந்தாலும் நடப்பு பற்றாக்குறை 2.8 சதவீதத்தை தொடும் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டைம், எனர்ஜி, பணம் எல்லாமே வேஸ்ட் - எலான் மஸ்க்கை விமர்சித்த ஆனந்த் மகேந்திரா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பல நாடுகளை பாதித்துள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்கான உணவு பொருள்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் கடும் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. மேலும், பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நாட்டில் வேளாண் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று, கிராமப்புற தேவை உயர்வு காணலாம். இது பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Economy, Indian economy, RBI, Reserve Bank of India