• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேற்றம்!

தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேற்றம்!

  • Share this:
உலக வங்கி வெளியிடும் தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தில் வந்துள்ளது.

தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இருக்கும் 190 நாடுகளுக்கான, 2020ம் ஆண்டு தரவரிசை பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தை பிடித்திருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 6 ஆண்டுகளில், இந்த பட்டியலில் இந்தியா 79 இடங்கள் முன்னேறியுள்ளது. 2014-ல் மோடி பதவியேற்ற போது தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 142ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. 2017ஆம் ஆண்டில் 130 ஆவது இடத்திற்கு முன்னேறியது.

தொடர்ந்து 2018ல் 100ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 2019ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 77வது இடத்தை இந்தியா பிடித்தது. இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 63 வது இடதுக்கு இந்தியா உயர்ந்துள்ளது.

கட்டுமானத்திற்கு தேவையான அனுமதி வழங்குவதில், 52வது இடத்தில் இருந்து 27வது இடத்திற்கும் , எல்லைகளை தாண்டி செய்யப்படும் வர்த்தகத்தில் 80வது இடத்தில் இருந்து 68வது இடத்திற்கும் இந்தியா முன்னேறியுள்ளது. சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதில், கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியா 13வது இடத்திற்கு கீழ் இறங்கியுள்ளதாகவும், மின்சாரம் வழங்குவதில் 22வது இடத்தில் இருந்து 25வது இடத்திற்கு சரிந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர வேண்டும் என்றால், இன்னும் அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த பட்டியலில் பின் தங்கியிருந்த இந்தியா, மாநில அளவில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் என்ற பட்டியலை கொண்டு வந்தது. இதன் காரணமாக, மாநிலங்களிடையே முதலீடுகளை ஈர்க்க போட்டி ஏற்பட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: