ஹோம் /நியூஸ் /வணிகம் /

உள்நாட்டு உற்பத்தி சரிவு: நிர்மலா சீதாராமனுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

உள்நாட்டு உற்பத்தி சரிவு: நிர்மலா சீதாராமனுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகளில் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலையிலிருந்து வந்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகளில் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலையிலிருந்து வந்தது.

  ஆனால் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான ஜிடிபி வளர்ச்சிக்கான தரவில் இந்தியாவின் ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது.

  அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. அதுவே ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாகச் சரிந்துள்ளது.

  இதே காலாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக உள்ளது. இன்று வெளியான தரவுகள் மூலம் 2018-2019 நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது தெரியவந்துள்ளது.

  தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி சரிந்து வரும் நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசின் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.

  இந்நிலையில் இந்தியாவின் ஜிடிபி சரிவு, பொதுத் துறை வங்கிகளில் உள்ள வாரா கடன், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, வங்கி அல்லாத நிதித் துறையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் போன்றவை கண்டிப்பாக நிர்மலா சீதா ராமனுக்கு மிகப் பெரிய சவால்களாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

  கடந்த 5 ஆண்டுகளில் இதுவே இந்தியாவின் குறைந்தபட்ச ஜிடிபி வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Economy, GDP, Indian economy, Minister Nirmala Seetharaman