பட்ஜெட் 2021: எல்.ஐ.சி, ஐடிபிஐ வங்கியின் அரசு முதலீடு வாபஸ்- அறிவிப்பு வெளியாகிறது?

பட்ஜெட் 2021: எல்.ஐ.சி, ஐடிபிஐ வங்கியின் அரசு முதலீடு வாபஸ்- அறிவிப்பு வெளியாகிறது?

கோப்பு படம்

அரசு முதலீட்டை வாபஸ் பெறுவதன் மூலம் 2.5 ட்ரில்லியன் ரூபாய் முதல் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் வரை திரட்டத் திட்டமிட்டுள்ளது.

 • Share this:
  அரசு நிறுவனமான இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டுச் சக்தி எல்.ஐ.சியில் உள்ள அரசு தன் பங்குகளில் 10% முதல் 15% வரை திரும்பப் பெறும் அறிவிப்பை வரும் பட்ஜெட் 2021-ல் அறிவிக்கலாம் என்று நம்பத்தகுந்த நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தனியார்மய நோக்கோடும் பொதுநிதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடும் அரசு நிறுவனங்களிலிருந்து தன் முதலீட்டை மத்திய அரசு வாபஸ் பெறும் முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

  ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெரிய அரசு நிறுவனங்களிலிருந்து அரசு முதலீட்டை வாபஸ் பெறும் நிர்மலா சீதாராமனின் திட்டங்கள் கொரோன பெருந்தொற்று காரணமாக தடைப்பட்டது.

  தற்போது கொரோனா காலத்தில் முடங்கிய பொருளாதாரத்தை சீர்தூக்க தனியார்மய முனைப்பை மத்திய அரசு கையிலெடுக்கும் என்று கூறப்படுகிறது.

  இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு சக்தியான எல்.ஐ.சியில் அரசு தன் முதலீட்டை வாபஸ் பெற எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம்.

  கடந்த ஆண்டே தனது 20% முதலீட்ட வாபஸ் பெற அரசு நினைத்த போது நிர்வாக முட்டுக்கட்டைகளினால் அது நிறைவேறவில்லை.

  இந்நிலையில் எல்.ஐ.சி.. ஐடிபிஐ வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியிலிருந்து அரசு தன் முதலீட்டை கொஞ்சம் வாபஸ் பெறும் அறிவிப்பை வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அரசு முதலீட்டை வாபஸ் பெறுவதன் மூலம் 2.5 ட்ரில்லியன் ரூபாய் முதல் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் வரை திரட்டத் திட்டமிட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: