வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

மாதிரிப்படம்

TrueCaller செயலிக்கு மாற்றாக, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள Bharat Caller என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 • Share this:
  அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் மோசடி நபர்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய Contact List -ல் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ளும்போது அவர்களின் பெயர்களை அறிந்து கொள்வதற்கும் TrueCaller உதவுகிறது. இந்த செயலி, உபயோகப்படுத்துபவர்களின் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளும். மொபைலில் இருக்கும் தொடர்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றையும் சேகரிப்பதுடன், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது, மொபைலுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பியை, மெசேஜ் வருவதற்கு முன்பே TrueCaller -செயலி காண்பித்துவிடும். அந்தளவுக்கு விரைவாக தகவல்களை கொண்டுவந்து சேர்க்கும்.

  அதேநேரத்தில் இந்த செயலியைப் பயன்படுத்துபவர்களிடையே ஒருவிதமான அச்சமும் இருக்கிறது. நம்முடைய மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களை ஊருவி அலசி ஆராய்ந்து, அந்த தகவல்களை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் நீங்கள் கொடுக்கும் அணுகல் அனுமதியுடனேயே நடக்கும். பெரிய ஆபத்து இல்லை என்ற எண்ணத்தில் நீங்களும், அந்த செயலி கேட்கும் செட்டிங்ஸ் அணுகல்களை கொடுத்துவிடுவீர்கள். இந்நிலையில், அந்த செயலிக்கு போட்டியாக இந்தியாவிலேயே, மேட் இன் இந்தியா புரொஜெக்டில் தயாரிக்கப்பட்ட பாரத்காலர் (Bharat Caller) என்ற செயலி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, இந்தியர்களின் தனி நபர் தகவல் பாதுகாப்பு உத்திரவாதமானது என கூறப்படுகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த TrueCaller செயலில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன், இன்னும் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவரான பிரஜ்வால் சின்ஹா மற்றும் குணால் பஸ்ரிச்சா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு நேஷ்னல் ஸ்டார்ட்அப் விருதையும் பெற்றிருந்தனர்.

  பாரத் காலர் செயலி குறித்து பேசும்போது, இந்த செயலி 50 மில்லியன் யூசர்களின் டேட்டாக்களையும், உலகளவில் ஒரு பில்லியன் நம்பர்களின் டேட்டாக்களையும் கொண்டுள்ளது. பாரத் காலர் செயலி, யூசர்களின் கால் லாக்குள் (Call Logs), தொடர்புகளை சேகரிக்காது. இதனால், தனிநபர் பிரைவசி பாதுகாக்கப்படும். இந்த நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்களிடம் மொபைல் எண்கள் மற்றும் யூசர்களின் தரவுகள் இருக்காது. என்கிரிப்டேட் பார்மேட்டில் செயலி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்தியாவிற்கு வெளியே இருப்பவர்கள், பாரத் காலரில் இருக்கும் தகவல்களை பெற முடியாது. மேலும், இந்த செயலி தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத் உள்ளிட்ட மொழிகளிலும் சேவைகளை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  Also read... Gold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... இன்று (ஆகஸ்ட் 28-2021) சவரனுக்கு ரூ. 384 உயர்வு!

  பிரைவசி காரணங்களுக்காக இந்திய ராணுவம், True Caller செயலியை தடை செய்துள்ளது. ஸ்பைவேர் இருக்க வாய்ப்புள்ளது என்பதால், அந்த செயலியை அனைத்து ராணுவத்தினரும் பயன்படுத்தக்கூடாது எனக் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவை மையமாகக் கொண்டு முற்றிலும் பாதுகாப்பு அம்சம் நிறைந்த இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: