உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதிலும், அதை பயன்படுத்துவதிலும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை ஊக்குவிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 84 சதவீதத்தை இறக்குமதி மூலமாக பெற்று வருகிறது.
இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதுதொடர்பாக பிரேசில் நாட்டு அமைச்சர் பெண்டோ அல்பெக்கர்கியூவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், “நீண்ட கால சிறப்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான விருப்பத்தை இந்தியா தெரிவித்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா :
தற்போதைய சூழலில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. பிரேசில் நாட்டில் இருந்து சிறிய அளவுக்கான கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. அதே சமயம், பிரேசில் நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை :
எரிசக்தி துறையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், “இந்தியா மற்றும் பிரேசில் நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, எரிசக்தி துறையில் ஏற்கனவே இருக்கும் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான உத்திசார்ந்த கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு தரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு என்பது முக்கிய பங்காற்றும் என்ற கருத்து ஏற்கப்பட்டது. பிரேசில் நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்திய நிறுவனங்கள் மூலமாக முதலீடுகளை அதிகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இருதரப்பு முதலீடுகளை ஊக்குவிக்கும் அதேவேளையில் ஏற்கனவே உள்ள முதலீடுகளை தொடர்ந்து பாதுகாப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
Also Read : இந்தியாவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?
கச்சா எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட வேண்டிய இரு தரப்பு வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருவருக்கும் பயனளிக்க கூடிய இந்த வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய ஆர்வம் தெரிவிக்கப்பட்டது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : மத்திய அரசின் ரூ. 2000 தொகை கிடைக்க கட்டாயம் இதை செய்திடுங்கள்!
முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் :
தற்போது இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சார்பில், பிரேசில் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
பிரேசில் தற்போது தனது எண்ணெய் உற்பத்தியை 10 சதவீதம் அளவுக்கு ஊக்குவித்து நாள் ஒன்றுக்கு 3.3 மில்லியன் பேரல் அளவுக்கு விநியோகம் செய்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.