4 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐபோன் விற்பனை சரிவு!

ஆப்பிள் ஐ போன்

இந்தியாவில் 2018-ம் ஆண்டுக்கான இலக்காக 30 லட்சம் ஐபோன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 20 லட்சம் ஐபோன்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் ஐபோன் விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக சரிவை சந்தித்துள்ளது.

  ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் வழக்கமாக தீபாவளி சமயத்தில் ஐபோன் விற்பனை அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக விற்பனை சரிவை சந்தித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

  இந்தியாவில் 2018-ம் ஆண்டுக்கான இலக்காக 30 லட்சம் ஐபோன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 20 லட்சம் ஐபோன்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் அதிக விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: