ஹோம் /நியூஸ் /வணிகம் /

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அக்ஷதா மூர்த்தி

அக்ஷதா மூர்த்தி

Akshata Murthy and Rishi Sunak | இங்கிலாந்து பிரதமரின் மனைவியான அக்ஷதா மூர்த்தியின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது! அதைப் பற்றிய முழுவிவரங்களை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், இந்தியாவில் தொடங்கி உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வரும் ஜாம்பவானான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக் பற்றி சமீபத்தில் செய்திகள் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். நாராயணமூர்த்தியின் ஒரே மகளான அக்ஷதா மூர்த்தியை ரிஷி சுனக் மணந்துள்ளார்.

அக்ஷதா மூர்த்தி ஏற்கனவே தனக்கென்று ஒரு பேஷன் லேபில், பிராண்டு மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகள், என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்து வருகிறார். இங்கிலாந்து பிரதமரின் மனைவியான அக்ஷதா மூர்த்தியின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது! அதைப் பற்றிய முழுவிவரங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிரதமராக பதவியேற்று இருக்கும் ரிஷி சுனக், தன் குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அக்ஷதா மூர்த்திக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3.89 கோடி பங்குகள் உள்ளன. இவருக்கு, இந்த ஆண்டு டிவிடென்ட் வருமானமாக 126.61 கோடி வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் வசித்து வரும் அக்ஷதா மூர்த்திக்கு UK சட்டப்படி, யுகேவிற்கு வெளியில் இருந்து இவ்வளவு வருமானம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அக்ஷதா மூர்த்தி இந்தியாவில் கர்நாடகாவில் பிறந்தவர். பெங்களூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கலிபோர்னியாவில் இரட்டை பட்டப்படிப்பை, எகனாமிக்ஸ் மற்றும் ஃபிரெஞ்சு பாடங்களில் படித்து தேர்ச்சி பெற்றார். லாஸ் ஏஞ்சல்சில் ஃபேஷன் டிசைனில் டிப்ளோமா படித்த அக்ஷதா அங்கேயே சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் எம் பி ஏ படித்தபோது ரிஷி சுனக்கை சந்தித்து காதலாகி திருமணம் செய்து கொண்டார் .

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமகன் அல்ல. ஆனால் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடியிருப்பு நிலை, UKவில் வசிக்கும் அக்ஷதா மூர்த்திக்கு கடந்த 15 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் பணம் ஈட்டும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், யுகேவில் இது ஒரு சிக்கலாகவே தொடர்ந்து வருகிறது.

Also Read : இங்கிலாந்து செல்ல டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த பாட்டி.. நாட்டையே ஆள போகும் பேரன்... ரிஷி சுனக் பற்றி சுவாரஸ்ய தகவல்

வேறு நாட்டின் குடிமகனாக குடியிருப்பு உள்ளவர்கள் நிலை என்பது, நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்று குறிப்பிடுகிறது. வேறு நாட்டில் இருந்து நீங்கள் பெறும் வருமானத்திற்கு யூகேவில் நீங்கள் வரி செலுத்த வேண்டாம். எனவே அக்ஷதா மூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் இருந்து மற்றும் இந்தியாவிலிருந்து பெறப்படும் எந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனையாக இருந்து வருகிறது.

இந்த பிரச்சனை, ரிஷி சுனாக் பிரதம மந்திரி போட்டிக்கு கலந்து கொண்ட நிலையில் பெரிய அளவு வெடித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அக்ஷதா மூர்த்தி சார்பாக வெளியான செய்தியில், அக்ஷதா மூர்த்தி இந்திய குடியிருப்பாளர் தான், அவரால் வேறு ஒரு நாட்டின் சிட்டிசனாக மாற முடியாது. யூகேவில் அவர் ஈட்டும் வருமானம் அனைத்திற்குமே அவர் யூகே விதிப்படி வரிகளை செலுத்தி இருக்கிறார், தொடர்ந்து செலுத்துவார் என்று கூறப்பட்டது.

Also Read : அமுல் கேரக்டருடன் நடைபோடும் ரிஷி சுனக்..! இங்கிலாந்து பிரதமரை வாழ்த்திய அமுல் நிறுவனம்.!

மும்பை பங்குச்சந்தையில் அக்ஷதா மூர்த்தியின் பங்குகளின் மதிப்பு 5,956 கோடியாக இருந்தது. பங்குகளின் டிரேடிங் விலை 1527.40 ஆகும். 2021-22 நிதியாண்டுக்கான டிவிடெண்ட் தொகையாக ஒரு பங்குக்கு ரூ.16 என்று வழங்கப்பட்டது என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த ஆண்டு, ஒரு பங்குக்கு ரூ.16.50 டிவிடெண்ட் ஆக வழங்க இருக்கிறது என்று நிறுவனம் பதிவு செய்த ஃபைலிங்கில் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து, அக்ஷதா, இந்த ஆண்டில் ரூ.126.61 கோடியை வருமானமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் வழியாக டிவிடெண்டாக பெற்ற வருமானத்திற்கு அவர் யூகேவில் எவ்வளவு வரி செலுத்த இருக்கிறார் என்பதை பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

Published by:Selvi M
First published:

Tags: India, Infosys, Rishi Sunak, Tamil News, Trending