இந்தியா உடன் வர்த்தகப் போரை இழுக்கும் டொனால்டு டிரம்ப்!

news18
Updated: July 10, 2019, 2:54 PM IST
இந்தியா உடன் வர்த்தகப் போரை இழுக்கும் டொனால்டு டிரம்ப்!
மோடி. ட்ரம்ப்
news18
Updated: July 10, 2019, 2:54 PM IST
டெல்லியில் இந்த வாரம் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இடையில் இறக்குமதி வரி குறித்து விவாதிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதை ஏற்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை 9-ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில், “நீண்ட காலமாக இந்தியா, அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இதை இனிமேலும் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியாது” என்று டிவிட் செய்துள்ளார்.Loading...

மே மாதம் இந்தியாவுக்கு வழங்கி வந்த வர்த்தக சிறப்பு உரிமை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. அதை அடுத்து ஜூன் 5-ம் தேதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் உட்பட 28 பொருட்கள் மீது இந்திய அரசு வரியை உயர்த்தியது.

இதை எதிர்த்து உலக வர்த்தக மையத்திடம் அமெரிக்கா முறையிட்டது. ஜூன் 27-ம் தேதி ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்து பேசினார்.

அதில் இறக்குமதி வரி, வர்த்தக சிறப்புரிமை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மறுபக்கம் சீன அதிபர் ஜி பிங்கை சந்தித்த டொனால்டு டிரம்ப் இனி இரு நாடுகள் இடையில் இறக்குமதி வரி விதிக்கப்படாது என்று தெரிவித்தார். அதன் பிறகு இரு நாடுகள் இடையில் நடைபெற்று வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் மீது 50 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கி வந்த சிறப்புரிமையை அமெரிக்கா நீக்கியதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எப்போதும் போலவே வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

சீனா உடனான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா உடன் தங்களுக்கு உள்ள வரி சிக்கல்களால் இங்கு வர்த்தக போரை அமெரிக்கா தொடங்க உள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...