ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதில் இந்தியாவுக்குப் பல மடங்கு லாபம் - எவ்வளவு தெரியுமா?

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதில் இந்தியாவுக்குப் பல மடங்கு லாபம் - எவ்வளவு தெரியுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த ஏப்ரல் - மே காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி 4.7 மடங்கு அளவிற்கு இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உக்ரைன் ரஷ்யா போர் காரணத்தினால் ரஷ்யா மேல் முக்கிய நாடுகள் பொருளாதாரத் தடையைப் போட்டனர். இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கிய கச்சா எண்ணெய் மூலம் பல மடங்கு லாபம் அடைந்துள்ளது.

நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் கூட்டுச் சேருவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிப் போர் புரிந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள், குறிப்பாக வல்லரசு நாடுகள் சார்பில் ரஷ்யாவுக்கு எதிராக அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

தடைகள் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மார்க்கெட் சரியத் தொடங்கியது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த இந்த சந்தர்ப்பத்தை இந்தியா மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்திலிருந்தது சவுதி அரேபியா.

ஆனால், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், விநியோகத்தில் இரண்டாம் நாடு என்ற இடத்தை ரஷியா பிடித்துக் கொண்டது.

முன்னதாக, உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்ட நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 140 டாலர் என்றானது. கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக 100 டாலர்களைக் கடந்தது.

ரஷ்யாவிடம் வாங்கும் எண்ணெய் அதிகரிப்பு

ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு, ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு 2 சதவீதம் மட்டுமே. அதாவது கடந்த ஆண்டில், மொத்தமே ரஷ்யாவிடம் இருந்து 12 மில்லியன் பேரல்களை மட்டுமே வாங்கியிருந்தது. ஆனால், தற்போது மொத்த இறக்குமதியில் சுமார் 12 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் - மே காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி 4.7 மடங்கு அளவிற்கு இந்தியா அதிகரித்தது. அதாவது, உலக சந்தையைக் காட்டிலும் குறைவாக இருந்த காரணத்தால், நாளொன்றுக்கு 40 ஆயிரம் பீப்பாய்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப்பட்டது.

Also Read : EPFO சந்தாரர்களுக்கான நற்செய்தி.. இனி நீங்களும் விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்..!

இந்தியா பலன் அடைந்தது எப்படி

உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், தங்களுடைய கச்சா (ஒரு பீப்பாய்) எண்ணெய்க்கு 35 டாலர் வரையில் ரஷியா சலுகை வழங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலிருந்து ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிய வகையில், இதுவரை 35 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தெரிவிக்கிறது.

மற்றொரு பக்கம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் பணவீக்கமும் கட்டுக்குள் வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேன்மேலும் சரிந்து விடாமல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில், பலவித உத்திகளைக் கடைப்பிடித்து கச்சா எண்ணெய்யை இந்திய அரசு சேமித்து வைத்ததன் மூலமாக ரூ.25,000 கோடி மிச்சம் செய்யப்பட்டது.

Published by:Janvi
First published:

Tags: Crude oil, Russia, Russia - Ukraine