• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • FDI Inflows: 2020ல் அதிக அந்நிய நேரடி முதலீடு கிடைத்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம் - ஐ.நா தகவல்!

FDI Inflows: 2020ல் அதிக அந்நிய நேரடி முதலீடு கிடைத்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம் - ஐ.நா தகவல்!

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடு

இந்தியாவை பொறுத்தவரையில் 2019-ல் 51 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2020-ல் 64 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

  • Share this:
2020ம் ஆண்டு அதிகப்படியான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த நாடுகளுள் இந்தியா 5ம் இடத்தில் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக, உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டில் 35% அளவுக்கு சுருங்கியுள்ளதாக ஐ.நா. வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள உலக முதலீட்டு அறிக்கை 2021-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2020ம் ஆண்டில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் நடவடிக்கைகள் தற்போதுள்ள முதலீட்டு திட்டங்களை மந்தப்படுத்தின, மேலும் மந்தநிலையின் வாய்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களை (MNE) புதிய திட்டங்களை மறு மதிப்பீடு செய்ய வழிவகுத்தன என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read:    இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் - அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

அதே நேரத்தில் இந்தியாவில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2020ல் அந்நிய நேரடி முதலீடு 27% அதிகரித்திருப்பதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 2019-ல் 51 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2020-ல் 64 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ($64 பில்லியன் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4.75 லட்சம் கோடி ரூபாயாகும்.)

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் காரணமாக உலக அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்த நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

Also Read:   இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி Gaming துறை! குவியும் முதலீடுகள்

பெருந்தொற்றின் காரணமாக வீட்டிலேயே மக்கள் முடக்கப்பட்டதன் காரணமாக உலகளவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்தது. இதன் மூலமாக தொழில்நுட்ப துறையின் முதலீடு 22% அளவுக்கு உயர்ந்து 81 பில்லியன் டாலர்கள் முதலீட்டினை ஈர்த்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போல இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் 13 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் 2019ம் ஆண்டு சென்றிருந்ததாகவும், இது 2020ல் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: