சியோமி, ரியல்மி உள்ளிட்ட சீன நிறுவனங்களால் 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும், செல்போன்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - சீன எல்லையில் இருதரப்பு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பின், சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது ஹூவாய், zte போன்ற நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வழங்கவும் மத்திய அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், இந்திய செல்போன் சந்தையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆக்கிரமித்துள்ள, சீனா நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக, ரூ.12,000 கீழ் விற்கப்படும் செல்போன்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் சந்தையான இந்தியாவில் இருந்து, சீனாவின் ரியல்மி, ஷாவ்மி, ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் செல்போன்கள் சந்தையில் இருந்து கட்டாயமாக அகற்றப்படலாம்.
Also Read: இ-பைக் விற்பனையில் எகிறும் ஹீரோ மோட்டர்ஸ்... ஓலா, ஏதர் சறுக்கல்
மத்திய அரசின் இந்த நடவடிக்கை முடங்கி கிடக்கும் உள்நாட்டு செல்போன் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீன செல்போன்களின் வருகைக்குப் பின் இந்திய செல்போன் சந்தையில், உள்நாட்டு நிறுவனங்களில் ஒன்று கூட விற்பனையில் முதல் 10 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், சீன நிறுவனங்களின் பட்ஜெட் செல்போன்களுக்கு விதிக்கப்படும் தடையால், ஏற்படும் வெற்றிடத்தை உள்நாட்டு நிறுவனங்கள் நிரப்ப வாய்ப்பு உருவாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனையான செல்போன்களில் 31 சதவிகிதம், 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவானவையே அகும், சீனாவின் பொருளாதாரம் சரிந்திருக்கும் சூழலில், சியோமி நிறுவனம் தனது வளர்ச்சிக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: OPPO, RealMe, Smart Phone, Smartphone, VIVO