மிகப்பெரிய பொருளாதார நாடு: 6-ஆவது இடத்தை பிடித்தது இந்தியா

news18
Updated: July 11, 2018, 5:56 PM IST
மிகப்பெரிய பொருளாதார நாடு: 6-ஆவது இடத்தை பிடித்தது இந்தியா
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2018, 5:56 PM IST
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ் நாட்டை பின்னுக்குத் தள்ளி 6-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அடிப்படைகளை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மொத்த ஜிடிபி சுமார் 2.597 லட்சம் கோடி டாலராக உள்ளது. ஆனால், 2017-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் மொத்த ஜிடிபி சுமார் 2.582 லட்சம் கோடி டாலராக உள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டை பின்னுக்குத் தள்ளி 6-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகியுள்ளது. பிரான்ஸ் 7-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 134 கோடி. உலகின் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகை 6.7 கோடி மட்டுமே. இந்தியாவை ஒப்பிடுகையில் பிரான்ஸின் தனிநபர் ஜிடிபி 20 மடங்கு அதிகமாக இருப்பதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

2032-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என லண்டனை சேர்ந்த ஆராய்ச்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது பிரிட்டன் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 2017-ஆம் ஆண்டின்படி பிரிட்டனின் மொத்த ஜிடிபி 2.622 லட்சம் கோடி டாலராக உள்ளது.

மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்திலும் ஜெர்மனி நான்காவது இடத்திலும் உள்ளது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...