முகப்பு /செய்தி /வணிகம் / இந்தியாவில் வாகன ஏற்றுமதி 36 சதவீதம் உயர்வு - புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு தகவல்

இந்தியாவில் வாகன ஏற்றுமதி 36 சதவீதம் உயர்வு - புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களில் 10 சதவீதம் ஹரியானாவில் தயாரிக்கப்பட்டவை என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாட்டின் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கடந்தாண்டு சிறப்பான உயர்வை கண்டதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில், கடந்தாண்டுதான் கோவிட் தாக்கத்தில் இருந்து இந்த மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை அளவிடும் முக்கிய அளவுகோலான வாகன ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான உயர்வை கண்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வர்த்தகத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதன்படி, 2020-21 ஆண்டை ஒப்பிடுகையில் 2021-22இல் இந்தியாவின் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளது.

2020-21ஆம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21 நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22 நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்தது.

வணிக வாகனங்களின் ஏற்றுமதி 50,334இல் இருந்து 92,297 ஆக அதிகரித்து 83.36% உயர்வை எட்டியுள்ளது. இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டில் 32,82,786ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 44,43,018 ஆக அதிகரித்தது. இது 35.3% உயர்வாகும். வணிக வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களில் 10 சதவீதம் ஹரியானாவில் தயாரிக்கப்பட்டவை என புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Automobile, Car, Export