Home /News /business /

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் - 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் - 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

Ind Aus

Ind Aus

India - Australia Trade Agreement 2022 | இரு தரப்பிலும், 27 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் மதிப்பு அளவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வர்த்தகம் நடைபெறும். அதிக லேபர் தேவைப்படும் பிரிவுகளான ஜவுளி, ஆடைகள், நகைகள், இயந்திரங்கள், எலக்ட்ரிக் சாதனங்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல துறைகளும் பயன் பெறும்.

மேலும் படிக்கவும் ...
ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அந்த நாட்டில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை பொறுத்தே அமையும். வேலையில்லா திண்டாட்டம் இல்லாமல் இருந்தாலே, நாடு முன்னேறுகிறது என்று அர்த்தம். அது மட்டுமின்றி, அண்டை நாடுகளுடன் வணிக ஒப்பந்தமும், நட்பும் பேணும் போது நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சாதகமாக மாறும். அந்த வரிசையில், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மேற்கொண்ட இலவச வணிக ஒப்பந்தம், இந்தியாவில் கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்பம் மேம்பட்டு இருக்கும் போது, இரு நாடுகள் ஒப்பந்தத்தில் ஈடுபட நாட்டின் தலைமை குடிமகன்கள் நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  பிரதமர் நரேந்தர மோடி மற்றும் ஆஸ்திரேய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு விர்ச்சுவல் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை உறுதி செய்து, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் மூலம், ஜவுளி, லெதர், ஃபர்னிச்சர், நகைகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட 6,000 துறைகளைச் சேர்ந்த இந்திய ஏற்றுமதியாளர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி கூறுகையில், ‘இத்தனை குறுகிய காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தானது, இரண்டு நாடுகளுக்கு இடையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இது இரண்டு நாட்டின் உறவை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான தருணம் ஆகும்’ என்றார்.



இரண்டு நாடுகளில் பரஸ்பர பொருளாதார தேவைகளையும் நிரப்பும் வகையில் இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தம் மூலம், விநியோகச் சங்கிலியை இன்னும் அதிகரித்து, கூடுதலாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகமாக பங்களிக்க முடியும் என்றும் கூறினார்.

Also Read : பென்சன் பெறுபவர்கள் கூடுதல் உதவித்தொகை கிடைக்க இதை செய்யுங்கள்!

இந்த நிகழ்வைப் பற்றி ஆஸ்திரேலிய  பிரதமரான ஸ்காட் மோரிசன், இந்த ஒப்பந்தம் இந்தியாவுடனான நெருக்கமான நட்பை இன்னும் வலிமையாக்குகிறது என்று கூறினார். அது மட்டுமின்றி, இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் தான் இதுவரை ஆஸ்திரேலியா மேற்கொண்ட தனித்த மிகப்பெரிய முதலீடு என்றும் கூறினார். இது தொடக்கம் என்றும், இதே போல எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

‘IndAus ஒப்பந்தம் கையெழுத்திடும் போது, எங்களுடைய பொருளாதார உறவு மேம்படும் என்று உறுதியாகத் தெரிகிறது’ என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், லட்சக்கணக்கான புதிய வேலைகள் உருவாக இருக்கிறது. அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய செஃப் மற்றும் யோகா பயிற்சியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கல்வி நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.



இரு தரப்பிலும், 27 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் மதிப்பு அளவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வர்த்தகம் நடைபெறும். அதிக லேபர் தேவைப்படும் பிரிவுகளான ஜவுளி, ஆடைகள், நகைகள், இயந்திரங்கள், எலக்ட்ரிக் சாதனங்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல துறைகளும் பயன் பெறும்.

Also Read : உங்கள் பான்கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்திய பெட்ரோல் பொருட்கள், ஆடைகள், லெதர், ரசாயனம் மற்றும் நகைகள், ரத்தினக்கற்கள் ஆகியவற்றில் ஈடுபடும் என்றும், ஆஸ்திரேலியாவில் இருந்து கரி, கனிமங்கள் மற்றும் இடைக்கால சரக்குகளை இறக்குமதி செய்யும் என்று கூறப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Australia, India

அடுத்த செய்தி