ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்க நகைகளின் விலை உயருகிறது?

கோப்புப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை குறைக்கும் வகையில் ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

  கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்து நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்தது. இதையடுத்து கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதியை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 19 பொருட்களின் இறக்குமதி சுங்க வரியை 15% வரை அதிகரித்து மத்திய நிதித்துறை அலுவலகம் ஆணைப் பிறப்பித்துள்ளது.

  ஏ.சி, பிரிட்ஜ், 10 கிலோவுக்கும் குறைவான வாஷிங் மெஷின் ஆகியவைகள் மீதான வரி 10% இருந்து 20% உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி மற்றும் பிரிட்ஜ்களில் பயன்படுத்தப்படும் கம்பரஷர்கள் மீதான வரி 7.5% இருந்து 10% அதிகரித்துள்ளது. ஸ்பீக்கர்கர்கள், ரேடியல் கார் டயர்களுக்கான வரி 10% இருந்து 15%, ஷூ, சப்பல் போன்ற காலணிகளுக்கான வரி 20லிருந்து 25% உயர்ந்துள்ளது.

  பல வகையான வைரங்கள் மற்றும் ராசி கற்களின் வரி 5% இருந்து 7.5% அதிகரிக்கப்பட்டுள்ளது. நகைகள், நகை உதிரி பாகங்கள், விலை உயர்ந்த உலோகங்கள், முலாம் பூசப்பட்ட உலோகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி 15% இருந்து 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.

  ஷவர் பாத் உள்ளிட்ட குளியலறைப் பொருட்கள், பிளாஸ்டிக் பாக்ஸ்கள், பாட்டில்கள், சமையலறை பிளாஸ்டிக் பொருட்கள், பாசிகள், வளையல்கள், எழுதுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், டிராவல் பேக்கள், சிறிய மற்றும் பெரியவகை சூட்கேஸ்கள் ஆகியவற்றின் மீதான வரி 10% இருந்து 15% உயர்த்தப்பட்டுள்ளது.

  மேலும், முதன் முறையாக விமான எரிபொருளுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  ALSO WATCH...

  Published by:Vinothini Aandisamy
  First published: