ஹோம் /நியூஸ் /வணிகம் /

அடுக்கடுக்கான ஆஃபர்ஸ்.. கார்களை புக் செய்த மக்கள்.. பண்டிகை காலங்களில் அதிகரித்த கார் விற்பனை!

அடுக்கடுக்கான ஆஃபர்ஸ்.. கார்களை புக் செய்த மக்கள்.. பண்டிகை காலங்களில் அதிகரித்த கார் விற்பனை!

வாகன விற்பனை

வாகன விற்பனை

குறிப்பாக நவராத்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் 5.39 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பண்டிகை நாள்களில் கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் 3 ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது கொரோனா தொற்றிற்குப் பிறகு கோலாகலமாக இந்தாண்டு கொண்டாடப்பட்டது.

பொதுவாக விசேச நாள்கள் என்றாலே வீட்டிற்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் முதல் அனைத்து முன்னணி கார் நிறுவனங்கள் வரை ஒவ்வொன்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆஃபர்களை வாரி வழங்குவார்கள். இதோடு மக்களும் பண்டிகை நாள்களில் கார்கள் வாங்க வேண்டும் என்பதற்காகவே புதிய கார்களை முன்பதிவு செய்வார்கள்.

இதுபோன்று தான் நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடையே, சுமார் 8 லட்சம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய இரண்டு லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகும் ஆட்டோமொபைல் டீலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நவராத்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் 5.39 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையா? பாத்தா ஷாக் ஆயிடுவீங்க!

இதுகுறித்து ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்மைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் இந்தாண்டு நவராத்திரி பண்டிகையின் போது வாகன சில்லறை விற்பனை 57 சதவீதம் அதிகரித்து,கிட்டத்தட்ட 5.4 லட்சம் யூனிட்கள் வரை விற்பனை அதிகரித்து சாதனைப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்தாண்டு நவராத்திரியின் போது 3,42,549 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நவராத்திரி காலத்தில் சில்லறை விற்பனைப் பிரிவு 57 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதேபோன்று இந்தியாவில் கார்கள் விற்பனை குறித்து சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM) வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரை உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 92 சதவீதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. குறிப்பாக கடந்தாண்டு செப்டம்பரில் உள்நாட்டு சந்தையில் கார்கள் மற்றும் வேன்கள் போன்ற பல்வேறு பயணிகள் வாகன விற்பனை 1,60,212 ஆக இருந்த நிலையில் தற்போது 3,07,389 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் FADA தலைவர் மணீஷ் ராஜ் சிங்கானியா தெரிவிக்கையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பல்வேறு கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்றால் போல் தான் தீபாவளி சீசன் தொடங்கியவுடன் உற்பத்தியார்களிடமிருந்து மேம்பட்ட விநியோகம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் விற்பனை 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் மீண்டும் ஷோரூம்களுக்கு வந்திருப்பதை நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் கால விற்பனை காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Deepavali