Budget 2021 | பட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள்

Budget 2021 | பட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள்

பட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள்

ஓய்வூதியம் மற்றும் வட்டி வாயிலாக மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Share this:
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டின் அதிகம் ஏதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான உச்சவரம்பில் எந்த மாற்றமும் புதிதாக கொண்டுவரப்படவில்லை, ஆயினும் வரி தொடர்பாக 6 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் மாத சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலருக்கும், மிகுந்த எதிர்பார்ப்பாக இருப்பது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பு. இதில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் வரி தொடர்பாக 6 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவை என்ன என்பது குறித்து தற்போது காணலாம்.

1. ஓய்வூதியம் மற்றும் வட்டி வாயிலாக மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2. வரி கோப்புகளை மீண்டும் திறக்கும் கால வரம்மை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

3. வருமான வருமான வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கு, பத்திரங்களை பட்டியலிடுவதன் மூலதன ஆதாயங்கள் மற்றும் வட்டி வருமானம் ITRகளில் முன்பே நிரப்பப்படும்.

4. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை முகமற்றதாக மாற்றவும், தேசிய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய மையத்தை அமைக்கவும் மத்திய அரசு முன்மொழிந்தது.

5. டிஜிட்டல் முறைகள் மூலம் தங்கள் வணிகத்தை அதிகம் செய்யும் நிறுவனங்களுக்கு வரி தணிக்கை வரம்பிலிருந்து விலக்கு (இரண்டு மடங்காக உயர்த்தி) ரூ .10 கோடி விற்றுமுதல் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

6. ரூ .50 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்தை மறைக்கும் கடுமையான வரி குற்றங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Published by:Arun
First published: