பட்ஜெட்டில் வருமான வரி சலுகை கிடைக்குமா..? கடந்த ஆண்டுகளில் வரி குறைப்பு எப்படி இருந்தது ?

2012-13ம் ஆண்டில் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும், வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் வருமான வரி சலுகை கிடைக்குமா..? கடந்த ஆண்டுகளில் வரி குறைப்பு எப்படி இருந்தது ?
  • Share this:
மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்புதான் சாமானிய மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டுகளில் வருமான வரி குறைப்பு எப்படி இருந்தது என்பதை சற்றே பார்க்கலாம்.

வருமான வரி உச்ச வரம்பு என்பது ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக முன்னர் இருந்தது. 2006ம் ஆண்டு ஆண்களுக்கு ஒரு லட்சம் என்றும் பெண்களுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் என்றும் இருந்த வருமான வரி உச்ச வரம்பு, 2008-09ம் ஆண்டில் ஆண்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் என்றும், பெண்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிகரித்தார்.

2009-10ம் ஆண்டில், ஆண்களுக்கான வருமான வரி உச்சவரம்பாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்றும் பெண்களுக்கான வருமான வரி உச்ச வரம்பாக ஒர் லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என்றும் அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இவர் காலத்தில் தான், ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான வருமான வரி உச்ச வரம்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2012-13ம் ஆண்டில் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும், வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது.


பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வருமான வரி உச்ச வரம்பை இரண்டரை லட்சமாக அதிகரித்தார். அதன் பின்னர், 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில், இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்பட்டு வந்த 10 சதவிதம் வருமான வரி, 5 சதவிதமாக குறைக்கப்பட்டது.

2019-20ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், அப்போதைய இடைக்கால நிதி அமைச்சர் பியுஸ் கோயல், 5 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவித்தார். பொருளாதாரத்தை அதிகரிக்க, சாமானிய மக்களிடம் பணத்தை கொடுத்தாக வேண்டிய நிலை தற்போது இருப்பதால், இந்த ஆண்டு வருமான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

 
First published: January 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading