ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் வருமான வரிக் கணக்கை சமர்பித்து விட்டீர்களா? கடைசி தேதி எப்போது?

உங்கள் வருமான வரிக் கணக்கை சமர்பித்து விட்டீர்களா? கடைசி தேதி எப்போது?

வருமான வரிக் கணக்கை செலுத்த கடைசி நாள்

வருமான வரிக் கணக்கை செலுத்த கடைசி நாள்

Last date to file ITR: 2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2022 ஆகும்.

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :

 இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பணியாளரும், நிறுவனமும் தங்களுக்கான  வரிக்  கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2022 ஆகும். வருமான வரிக் கணக்கின் கடைசித் தேதி ஒவ்வொருவருக்கும்  பிரிவு களின் அடிப்படையில் மாறுபடும். ஐடிஆர் காலக்கெடுவைத் தவறவிட்டால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் மற்றும் வரிப் பொறுப்புக்கு விதிக்கப்படும் வட்டி என அதிக அபராதம் விதிக்கப்படும்.

வருமான இழப்பை மற்ற லாபத்தால் ஈடுகட்டி வரியைக் குறைக்கும் வழிகள் இதோ!

FY22 க்கான பல்வேறு ITR படிவங்கள் மற்றும் நிலுவைத் தேதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் 

1) சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத பிற தனிநபர்கள், ஜூலை 31, 2022க்குள் ITRஐத் தாக்கல் செய்ய வேண்டும்.

2) தணிக்கை தேவையில்லாத இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியும் ஜூலை 31, 2022 ஆகும்.

3) கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர், அக்டோபர் 31, 2022க்குள் தங்கள் ITR ஐத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விதி தனிநபர், ஒரு நிறுவனத்தின் பங்குதாரர், ஆகியவர்களுக்குப் பொருந்தும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பட்டய கணக்காளர்களிடமிருந்து கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு அந்த சான்றிதழோடு ITR ஐத் தாக்கல் செய்ய வேண்டும்.

4) வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 92E இன் கீழ், சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நபரும், ஒரு கணக்காளரிடம் இருந்து அறிக்கையைப் பெற்று, நவம்பர் 30, 2022 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். 

குறிப்பிட்ட தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய தவறினால் என்ன நடக்கும்

2017-18 மதிப்பீட்டு ஆண்டு வரை, தாமதமான வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது, நிலுவைத் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139 (4) இன்படி அபராதம் மற்றும் வட்டியுடன் தாமதமாகத் தாக்கல் செய்ய வேண்டும். 

பணமாகக் கொடுத்தால் செலவை மிச்சப்படுத்தலாமா ?

தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு, ஜூலை 31, 2022க்குப் பிறகு ITR தாக்கல் செய்தால், தாமதக் கட்டணமாக ரூ. 5,000 வசூலிக்கப்படும். ஒரு நிதியாண்டில் நபரின் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ரூ.1,000 தாமத கட்டணமாக விதிக்கப்படும்.

மேலும், காலக்கெடுவிற்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234A இன் கீழ் வரி செலுத்துவோர் கூடுதல் வட்டியை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.ஒவ்வொரு மாதமும் நிலுவைத் தொகையில் 1 சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படும். மேலும் இது நிலுவைத் தேதிக்குப் பிறகு, முதல் நாளிலிருந்து வரிக்கணக்கை தாக்கல் செய்யும் தேதி வரை கணக்கிடப்படுகிறது

First published:

Tags: FINANCE MINISTRY, Income tax