Home /News /business /

ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் ஈட்டினாலும் ஐடிஆர் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா.? 

ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் ஈட்டினாலும் ஐடிஆர் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா.? 

ITR படிவம்

ITR படிவம்

Income Tax Return | வருமான வரி விலக்கு வரம்புக்குள் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுவோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. ஆனால், வரி கணக்கு ஏன் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்க்க இதுபோல கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது.

மேலும் படிக்கவும் ...
2021 - 2022 நிதியாண்டு அல்லது 2022 - 2023 கணக்கு ஆண்டில் நீங்கள் வருமான வரி கணக்கு (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஆக, வருமானம் ஈட்டும் தனிநபர் ஒருவர் கடைசி கெடு தேதி முடிவடைவதற்கு முன்பாக கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், வருமான வரி விலக்கு வரம்புக்குள் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுவோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. ஆனால், வரி கணக்கு ஏன் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்க்க இதுபோல கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது.

டிடிஎஸ் அமைப்பில் இருந்தால் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்

உங்கள் வருமானத்திற்கு டிடிஎஸ் பிரிவின் கீழ் வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது என்றால், நீங்கள் கணக்கு தாக்கல் செய்தால் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெற இயலும் என்று நிதி மற்றும் வரி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழே என்றாலும் கூட, உங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரியை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்.



டிடிஎஸ் வரி பிடித்தம் இல்லாவிட்டால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா

ஒருவேளை உங்களுக்கு எந்தவித டிடிஎஸ் வரியும் பிடித்தம் செய்யப்படவில்லை, அதே சமயம் வருமானமும் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்கிறது என்றால், நீங்கள் தற்போது கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்ற குழப்பம் எழக் கூடும்.

Also Read : ITR சமர்ப்பிக்கும் முன் 26AS படிவத்தை சரிபாருங்கள்!

இதற்கு ஆர்த்தி ராடே என்னும் நிதி ஆலோசகர் பதில் அளிக்கையில், “குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு உங்கள் வருமானம் என்பது வருமான வரி விலக்கு வரம்பிற்கு உள்ளே இருந்தாலும் கூட நீங்கள் கணக்கு தாக்கல் செய்வதுதான் நல்லது. ஏனென்றால், ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும் நடைபெறும் எந்தவித இடைவெளியும் இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்யும்’’ என்றார் அவர்.

Also Read : வருமான வரி விலக்கு பிரிவுகள் இனி நம் விரல் நுனியில்!

பாஸ்போர்ட் ரினீவல் அல்லது விசா பெறுவதற்கு தேவைப்படலாம்

நாம் வருமான வரி வரம்பிற்கு மேலே செல்லாவிட்டாலும் கூட, பாஸ்போர்ட் ரினீவல் அல்லது விசா வேண்டி விண்ணப்பம் செய்யும்போது, முந்தைய ஆண்டுகளின் வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கையை கேட்பார்கள் என்றும், ஆகவே வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆர்த்தி ராடே தெரிவிக்கிறார்.



நில் ஐடிஆர் பலன்கள்

உங்கள் ஆண்டு வருமானம் என்பது வருமான வரி விலக்கு வரம்பை தாண்டாத நிலையிலும் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதன் மூலமாக உங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் வரியை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

Also Read : யாருக்கு எந்த ITR படிவம்? உங்களுக்கு எந்த படிவம்? விவரங்கள் இதோ..

எப்போது நில் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்

 
Published by:Selvi M
First published:

Tags: Income tax

அடுத்த செய்தி