வருமான வரி சோதனை! கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..?

வருமான வரி சோதனை!  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..?
கோப்பு படம்
  • Share this:
வருமானவரித்துறை அதிகாரிகள் ஒருவரை சோதனை செய்யம்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? 

வரி ஏய்ப்பு குறித்து நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ள முடியும். அரசு துறைகளிலிருந்தோ, வருமான வரி நுண்ணரிவு பிரிவிலிருந்தோ பெறப்படும் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளலாம்.

ஆவணங்களை சோதித்து பார்த்ததில் வரி ஏய்ப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் சோதனை மேற்கொள்ளலாம். ஒருவர் அவருடைய வருமானதிற்கு அதிகமாக ஆடம்பர செலவு செய்வது உறுதி செய்யப்பட்டால் சோதனை மேற்கொள்ளலாம். போலி ஆவணங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்தது உறுதியானாலும் சோதனை மேற்கொள்ளலாம்.


வருமானவரித்துறை சட்டம் பிரிவு 132, உட்பிரிவு 1ன் படி, முதன்மை ஆணையர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரியின் உத்தரவின் பேரில், வருமான வரி அதிகாரி சோதனை மேற்கொள்ள வேண்டும். வருமானத்தை குறைத்து காட்டியது தொடர்பான ஆவணங்களோ அல்லது பொருட்களோ இருக்கும் என்று கருதக்கூடிய எத்தகைய இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம்.

பெட்டகத்தின் அல்லது அறையின் சாவி இல்லை என்பது உறுதியானால் அதை உடைக்கும் அதிகாரம் சோதனை நடத்துபவர்களுக்கு உண்டு. சோதனையின் போது ஆவணங்களின் நகலை எடுத்துக்கொள்ளவும், ஆவணங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளது. பறிமுதல் செய்யப்ப்டட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை சோதனை செய்யும் அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.

சோதனைக்கு உள்ளாகும் நபர், அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த பொதுவான இரண்டு நபர்களை சாட்சியமாக தன்னுடன் வைத்துக்கொள்ளலாம். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதை பெற்றக்கொள்ளலாம். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். கைப்பற்றப்படும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும். அது தொடர்பான பட்டியலையும் அவருக்கு வழங்க வேண்டும்.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்