2021 - 2022 நிதியாண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். வரி சேமிப்பு தொடர்பான உங்கள் திட்டங்கள் அடுத்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் தொடங்கும். அதே சமயம், இந்த நிதியாண்டுக்கு மார்ச் மாதம் நிறைவடையும் முன்பாக வரி சேமிப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் முடித்தாக வேண்டும். இது தவிர பான் - ஆதார் இணைப்புக்கான இறுதிக் கெடு இந்த மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது. இது தவிர நிதி சார்ந்த பல விஷயங்களுக்கான இறுதி தேதிகள் இந்த மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதுபோன்ற சில விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம்.
வரி சேமிப்பு திட்டத்துக்கு கடைசி மாதம்:
பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சேமிப்பு பலன்களை அதிகரித்துக் கொள்வதற்கான கடைசி மாதம் இது. எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும் என்றாலும், இதை கடைசி நிமிடத்திற்கு பலரும் ஒத்திவைத்து விடுகின்றனர். உங்கள் வரி சேமிப்பு திட்டங்களுக்கு நீங்கள் இதுவரையில் திட்டமிடவில்லை என்றால், பொதுவான முதலீட்டுத் தவறுகள் இல்லாமல், இனியேனும் அதை விரைவாக செய்து முடித்து விடுங்கள்.
தாமதமான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி தேதி:
2020 - 21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி கெடு என்பது கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்திருக்கும். ஆனாலும், நீங்கள் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் தாமதப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இயலும். எனினும், இந்தக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்யும்போது அபராதம் மற்றும் வரித் தொகைக்கான வட்டி ஆகியவற்றை நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
பான் - ஆதார் இணைப்பு
பான் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தத் தேதிக்குள் நீங்கள் இணைக்காவிட்டால், உங்கள் பான் அட்டை செல்லாததாக மாறிவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த நேரிடும்.
வங்கியில் உங்களது KYC விவரங்களை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான இறுதிக் கெடு கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், அதற்கு பிறகு ரிசர்வ் வங்கி கால நீட்டிப்பு வழங்கியது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆகவே, தற்போது வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கிக் கிளைகளுக்கு அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை கொண்டு சென்று இதை அப்டேட் செய்து கொள்ளவும்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.