2021-ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டிய முக்கிய தேதிகள்.. முழு விவரம் அறிய க்ளிக் செய்யுங்க..

2021-ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டிய முக்கிய தேதிகள்.. முழு விவரம் அறிய க்ளிக் செய்யுங்க..

வருமான வரி

வருமான வரி காலெண்டர் 2021-ன் படி மாத வாரியாக முக்கியமான தேதிகளின் பட்டியல் இதோ..

  • Share this:
வரிவிதிப்பு செயல்முறையை எளிமையாக்குவதற்கும், நேர்மையான வரி செலுத்துவோருக்கு வெகுமதி அளிப்பதற்கும், அரசாங்கம் "வெளிப்படையான வரிவிதிப்பு -  நேர்மையானவர்களை மதிப்பளித்தல்"என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முகம் இல்லாத மதிப்பீடு, முகமற்ற முறையீடு மற்றும் வரி செலுத்துவோர் சாசனம் போன்ற பல சீர்திருத்தங்களை இந்த தளம் கொண்டு வந்துள்ளது.

மேலும், வரி செலுத்துவோர் வரிச் சட்டங்களுக்கு இணங்குவதற்காகவும், ஒரு காலக்கெடுவைத் தவறவிடாமல் இருப்பதற்காகவும் வருமான வரித்துறை இந்த ஆண்டிற்கான வரி செலுத்தும் தேதிகளை கொண்ட ஒரு காலெண்டரை வெளியிட்டுள்ளது. வருமான வரி காலெண்டர் 2021்-ஆம் ஆண்டின் படி மாத வாரியாக முக்கியமான தேதிகளின் பட்டியலை குறித்து காண்போம்.

ஜனவரி 10-ஆம் தேதி: தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள்.

ஜனவரி 15: தணிக்கை அறிக்கைகளை வழங்குவதற்கான கடைசி நாள்.

ஜனவரி 31: விவாட் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்ய வேண்டிய கடைசி நாள்.

பிப்ரவரி 15: தணிக்கை தேவைப்படும் நபர்களுக்கு IT வருமான கணக்கை தாக்கல் செய்வதற்கான நாள்.

மார்ச் 15: AY 2021-22க்கான நான்காவது தவணை வரியை முன்கூட்டியே செலுத்தும் நாள்

மார்ச் 31: கூடுதல் வரி விதிக்காமல் AY 2020-21 மற்றும் விவாட் சே விஸ்வாஸ் கட்டணத்திற்கான வருமான கணக்கை ஃபைல் செய்ய வேண்டிய நாள்.

மார்ச் 31: மேலும் இதே தேதியில் ஆதார் எண்ணை பான் உடன் இணைப்பதற்கான கடைசி நாள்.

மே 31: நிதி பரிவர்த்தனை u / s 285BA அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய தேதி.

ஜூன் 15: AY 2022-23-க்கான முன்கூட்டிய வரியின் முதல் தவணையை செலுத்தும் நாள்.

ஜூலை 31: கார்ப்பரேட் மதிப்பீட்டாளர் அல்லது கார்ப்பரேட் அல்லாத மதிப்பீட்டாளரைத் தவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படும் வேறு மதிப்பீடுகளுக்கான வருமான வரி கணக்கை  தாக்கல் செய்யும் நாள்.

செப்டம்பர் 15: முன்கூட்டிய வரியின் இரண்டாவது தவணையை செலுத்தும் தேதி.

செப்டம்பர் 30: சர்வதேச அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனையில் நுழையாத மதிப்பீட்டாளருக்கான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நாள்.

அக்டோபர் 31: சர்வதேச அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை இல்லாத ஒரு பெருநிறுவன மதிப்பீட்டாளர் அல்லது கார்ப்பரேட் அல்லாத மதிப்பீட்டாளரின் AY-க்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவர்களின் புத்தகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நாள்.

நவம்பர் 30: சர்வதேச அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை கொண்ட மதிப்பீட்டிற்கு, AY 2021-22-க்கான ITR-ஐ தாக்கல் செய்ய வேண்டிய நாள்.

டிசம்பர் 15: AY 2022-23-க்கான முன்கூட்டிய வரியின் மூன்றாவது தவணையை செலுத்த வேண்டிய நாள்.

வரி செலுத்துவோர் நேர்மையான மற்றும் இணக்கமானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், வரி செலுத்துவோருக்கு நியாயமான மரியாதை வழங்குவதை வரி செலுத்துவோர் சாசனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய தளங்களில், படிவம் 26AS ஒரு ஒற்றை அறிக்கையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் சுருக்கமாகக் தெரிவிக்கிறது. மேலும் இந்த தளம் வரி செலுத்துவோரின் வருமான வரி கணக்கை ஈ-ஃபைலாக சேமிக்க உதவுகிறது. இது "முன் நிரப்புதலுடன் வழிகாட்டி அடிப்படையிலான படிவம்"என்ற அம்சத்தையும் பெறுகிறது. இது தொந்தரவு இல்லாமல் வருமானத்தை வசதியாகவும் துல்லியமாகவும் தாக்கல் செய்வதை உறுதி செய்கிறது.

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: