Home /News /business /

கொரோனா சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரி விலக்கு இந்தாண்டும் அமல் - சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.!

கொரோனா சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரி விலக்கு இந்தாண்டும் அமல் - சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Income Tax Exemption | கொரோனா சிகிச்சைக்காக தனிநபர்கள் பெறும் பணம் அல்லது கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர் பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகைக்கு 2021-22 நிதியாண்டிலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெற்றால் நிச்சயம் அவர்கள் வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். வீட்டு லோன், பிபிஎப், எல்ஐசி, குழந்தைகளின் கல்விச்செலவு உள்பட பலவற்றிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்தாண்டு கொரோனா தொற்று மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய போது ஊழியர்களின் வசதிக்களுக்காக பல்வேறு சலுகைகளை வருமானத்துறை அறிவித்தது. அதில் வருமான வரித்தாக்கல் மற்றும் ரிட்டன் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

குறிப்பாக கடந்தாண்டுகளில் கொரோனா தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டதோடு பலர் உயிரிழந்தனர். இந்த சூழலில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பணத்தைப்பெற்று பலர் சிகிச்சைப் பெற்றனர். மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் இது போன்று நிதியுதவி மற்றும் கொரோனா சிகிச்சைக்காக பெற்ற பணங்கள் எதுவும் வருமான வரி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது அதற்கு விலக்கு அளிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி 2021-2022 நிதியாண்டிலும் பணியாளர்கள் கொரோனா சிகிச்சைக்காக பெறும் அனைத்து தொகைக்கும் விலக்கு அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில், மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய நிபந்தனைகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு விலக்கு கோருவதற்கான படிவத்தை அறிவித்துள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள்? எப்படி சமர்ப்பிக்க வேண்டும்? என அறிந்துகொள்வோம்.



கொரோனா சிகிச்சைக்காக நிறுவனம் அல்லது உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திற்கு வரி விலக்கு பெறுவதற்கு முதலில் இதுத்தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஒரு படிவத்தையும் வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.! 

வருமானவரித்துறையின் புதிய அறிவிப்பின் படி, பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது என்ற மருத்துவ அறிக்கை ( பாசிடிவ் ரிப்போர்ட்) அல்லது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களால் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கிறோம் என ரிப்போர்ட்டை பெற்று அதை நிறுவன அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.



கொரோனா சிகிச்சைக்கு செலவாகியுள்ள மொத்த பணத்திற்கான ஆவணங்கள் நிச்சயம் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதோடு உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த தொகை, யாரிடமிருந்து பணம் பெறப்பட்டதோ? அவர்களின் பெயர், முகவரி, பான் எண் மற்றும் எந்த நிதியாண்டில் தொகை பெறப்பட்டது என்ற அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read : லோன் ஆப்களுக்கான புதிய வழிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மேலும் கொரோனா தொற்றினால் இறந்த ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் பெறப்படும் நிதியுதவிகளுக்கு வரி விலக்கு கோருவதற்கும் இந்த நடைமுறை பொருந்தும். இதோடு மருத்துவப் பயிற்சியாளர் அல்லது அரசு சிவில் பதிவு அலுவலகத்தால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கை அல்லது இறப்புச் சான்றிதழ் தேவை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. அந்த சான்றிதழலில், கொரோனா தொற்று பாதிப்பினால் தான் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார் என்ற விபரம் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Covid-19, Income tax, India

அடுத்த செய்தி