வருமானம் பெரும் அனைவருக்கும் வருமான வரித்துறை, நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வழங்கியுள்ளது. மக்கள் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் இன்னும் சிலர் ஆதாரை பானுடன் இணைக்காமல் இருப்பதால் காலக்கெடு மார்ச் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆதார் எண், பான் கார்ட் இணைக்கவில்லை எனில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில் பான் கணக்கு செல்லாமல் பொய் விடும் என்று தற்போது எச்சரித்துள்ளது.
வரித் துறையின் 11 மே, 2017 தேதியிட்ட அறிவிப்பு எண். 37/2017 இன் படி அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர். எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.
அதிகரிக்கும் சிம் ஸ்வாப் பண மோசடி..! போன் எடுத்தாலே வங்கி கணக்கில் இருந்து மாயமாகும் பணம்
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும், 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.4.2023 முதல், இணைக்கப்படாத PAN செயலிழக்கும். கடைசி தேதி விரைவில் நெருங்குகிறது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்! என்று வருமான வரித்துறை தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து அதே எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.
From 1.4.2023, the unlinked PAN shall become inoperative.
The last date is approaching soon.
Don’t delay, link it today! pic.twitter.com/OcvtJfewH2
— Income Tax India (@IncomeTaxIndia) December 10, 2022
பான் கார்டு செயல் இழந்தால் அதை இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்புள்ளது. இன்றைய தேதியில் பான் என்பது பரிவர்த்தனைக்கு முக்கியமானது. வங்கிக் கணக்குகள், மற்ற சேமிப்பு மற்றும் வர்த்தக கணக்குகளுக்கு பான் அவசியமாகும். எனவே பான் செல்லாது போனால் இந்த நிதி கணக்குகளும் பாதிக்கும்.
வருமானம் பெரும் மக்கள் அதை கணக்கில் காட்ட முடியாது, வருமான வரியும் செலுத்த முடியாது. அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால் அதில் சிக்கல் ஏற்படும்.
விவசாயத்திற்காக மொபைல் செயலி : தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை!
SMS மூலம் இணைக்க...
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள். இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
இணையம் வழியாக என்றால்... https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணைய முகவரியில் பதிவிடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Income tax, Pan card