வெளிநாட்டு சொத்துக்களை ஏன் கணக்குக் காட்டவில்லை? விளக்கம் கேட்கும் வருமான வரித் துறை

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தாலும், அதை வருமான வரி கணக்கு தாக்கலின் போது தெரிவிக்க வேண்டும்.

Tamilarasu J | news18
Updated: February 11, 2019, 4:35 PM IST
வெளிநாட்டு சொத்துக்களை ஏன் கணக்குக் காட்டவில்லை? விளக்கம் கேட்கும் வருமான வரித் துறை
வருமான வரி துறை
Tamilarasu J | news18
Updated: February 11, 2019, 4:35 PM IST
வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை வருமான வரி கணக்கில் காண்பிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தாலும், அதை வருமான வரி கணக்கு தாக்கலின் போது தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ஏன் தெரிவிக்கவில்லை என்று வருமான வரித்துறை சிலருக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

சொத்துக்கள் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு இன்று வரை வருமான வரி செலுத்தாமல் உள்ளவர்கள் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். பொதுவாக வருமான வரியை நிதி ஆண்டு முடிந்த உடன் வரும் ஜூலை மாதம் 1 முதல் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரியை சரியான காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் அபதாரம் விதிக்கப்படும். அதிலும் சில சொத்துக்கள் மற்றும் வருவாயை கணக்கில் காண்பிக்கவில்லை என்றாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...