ஹோம் /நியூஸ் /வணிகம் /

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்!

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

சாதாரண வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு அதிக விலக்கு வரம்பு வழங்கப்படுகிறது. 

  • News18
  • 3 minute read
  • Last Updated :

இந்திய வருமான வரிச் சட்டம் மூத்த குடிமக்களுக்கும், மிக மூத்த குடிமக்களுக்கும் பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது. 60 வயது முதல் 80 வயது வரையிலான நபர்கள் 'மூத்த குடிமக்கள்' என்றும் 80 வயதுக்கு மேற்பட்ட நபர் 'மிக மூத்த குடிமக்கள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். மருத்துவ செலவுகள் மற்றும் வைப்புத்தொகைகளில் கிடைக்கும் வட்டி  போன்றவற்றின் அடிப்படையில்  மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகைகள் இந்திய அரசால் அளிக்கப்படுகின்றன. 

மூத்த குடிமக்களுக்கும், மிக மூத்த குடிமக்களுக்கும் வருமான வரிச் சட்டம் (Income Tax Act) பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. எனினும், இவற்றை இந்தியாவிலேயே வசிப்பவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். 2020-21 நிதியாண்டில், ஒரு மூத்த குடிமகனுக்கான வருமான வரி விலக்கு வரம்பு, ₹3,00,000. மூத்த குடிமக்கள் (Senior Citizens) அல்லாத சாதாரண பொது மக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ₹2,50,000. சாதாரணமாக வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது, ₹ 50,000 என்ற அளவிற்கு கூடுதலாக வருமான வரி விலக்கு இவர்களுக்கு கிடைக்கிறது. மிகவும் மூத்த குடிமக்களுக்கு, மிக அதிக அளவாக,  ₹5,00,000  வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. 

இப்போது, மூத்த குடிமக்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு:-

ஐ.டி.ஏ இன் 87A பிரிவின் கீழ் மூத்த மற்றும் சூப்பர் மூத்த குடிமக்கள் (super Senior Citizens) இப்போது வரி விலக்குகளை கோரலாம் என்று 2019ம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் சந்திக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன, 

அவை: 

* மூத்த குடிமக்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும், அவர்களின் மொத்த வருமானம் ரூ. 5 லட்சமாக இருக்கவேண்டும்.

* வரி விலக்குக்கான மொத்த தொகை ரூ. 12,500 ஆக இருக்க வேண்டும். 

* சாதாரண வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு அதிக விலக்கு வரம்பு வழங்கப்படுகிறது. 

வரி விலக்கு வரம்பு என்பது ஒரு நபர் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் வருமானத்தின் அளவு ஆகும். பொதுவாக ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் வரை உள்ள நபர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய தேவையில்லை. அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் அதன் வரம்பு ரூ. 3 லட்சம் மற்றும் மிகவும் மூத்த குடிமக்களாக இருந்தால் அதன் வரம்பு ரூ. 5 லட்சமாக இருக்கிறது. 

அட்வான்ஸ் வரி விலக்கு:-

வருமான வரிச் சட்டம் பிரிவு 208ன் கீழ், ஒரு நிதியாண்டுக்கு ரூ.10,000க்கும் மேல் வரிக் கடன்பாடு (Tax Liability) கொண்ட நபர்கள் அட்வான்ஸ் வரி அல்லது முன்கூட்டியே செலுத்த வேண்டும். இருப்பினும், பிரிவு 207ன் படி, மூத்த குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எந்தவொரு தொழிலும், வருமானமும் இல்லாத சீனியர் சிட்டிசன்கள் அட்வான்ஸ் வரி செலுத்த தேவையில்லை.

சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான வரிச்சலுகை:-

ஒரு மூத்த குடிமகன் வரிச்சலுகைக்கு தகுதியுடையவர் என்பதால் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் ஆண்டு பிரீமியத்திற்கு ரூ. 50,000 வரை செலுத்தப்படுகிறது. அதாவது, ஒரு மூத்த குடிமகனால் ஒரு வருடத்தில் செலுத்தப்படும் மருத்துவ காப்பீடு தொகையில், ரூ. 50,000 வரையிலான தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல, ஒரு மூத்த குடிமகன் தனது பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துகிறார் என்றால், அந்த தொகைக்கும் ரூ. 50,000 வரை கூடுதல் விலக்கு கோரலாம். இதற்கு முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை.  

மின்னணு வருமான வரித் தாக்கல் தேவையில்லை:-

ITR1 மற்றும் ITR4 படிவங்களில் வருமான வரித் தாக்கல் செய்வோர் கட்டாயமான டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் சீனியர் சிட்டிசன்களுக்கு இதில் விலக்கு உண்டு. சீனியர் சிட்டிசன்கள் சாதாரணமாக பேப்பர் முறையில் தாக்கல் செய்யலாம்.  அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆவண முறையில் அல்லது மின்னணு முறையில் என எதை வேண்டுமானாலும் தேர்தெடுக்கலாம்.

Also read... டயர்-II என்பிஎஸ் கணக்குகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்ற LIC, HDFC வங்கிகள்!

இன்சூரன்ஸ் பிரீமியம் :

ஆண்டுக்கு ரூ. 50,000 வரை செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு பிரீமியத் தொகைக்கு, சட்டப் பிரிவு 80Dன் கீழ் சீனியர் சிட்டிசன்கள் (Senior Citizens) சலுகை பெறலாம்.

எனவே, சாதாரணமாக வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது, அதிக விலக்கு வரம்பின் வடிவத்தில் ரூ. 50,000 கூடுதல் நன்மை மூத்த குடிமக்களுக்கு கிடைக்கிறது. கூடுதலாக மூத்த குடிமக்களின் வருமானம், வரிக்கு உட்பட்ட வரம்புக்குக் குறைவாக இருந்தால் மற்றும் அவை TDS வங்கியின் நிலையான வைப்பு (FD) வட்டிக்கு கழிக்கப்படுகிறது என்றால், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதன் மூலமோ அல்லது 15G/H படிவத்தை தாக்கல் செய்வதன் மூலமோ TDSல் கழிக்கப்படும் பணத்தை திரும்பப் பெறலாம்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Import tax