மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வருமான வரிச் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மாதிரி படம்

வருமான வரிச் சட்டம் பிரிவு 194 ஏ-வின் பிடி, ஒரு மூத்த குடிமகனுக்கு ரூ .50,000 வரை வட்டி செலுத்துவதிலிருந்து வங்கி அல்லது தபால் அலுவலகம் அல்லது ஒரு கூட்டுறவு வங்கி மூலமாக எந்தவொரு வரியும் கழிக்கப்படக்கூடாது என்பதற்கான விதிகளை வழங்குகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருமான வரிச் சட்டம் மூத்த குடிமக்கள் மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்குகிறது. அதன்படி 60 முதல் 80 வயதுக்குட்பட்ட ஒருவரை 'மூத்த குடிமகன்' என்று அழைக்கும் போது, 80 வயதுக்கு மேற்பட்ட நபர் 'மிகவும் மூத்த குடிமகன்' என்று அழைக்கப்படுகிறார். அந்த வகையில் இந்த வயதினருக்கு கிடைக்கக்கூடிய பொதுவான வருமான வரி சலுகைகள் குறித்து காண்போம்.

அதிக விலக்கு வரம்பு

சாதாரண வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு அதிக விலக்கு வரம்பு வழங்கப்படுகிறது. விலக்கு வரம்பு என்பது ஒரு நபர் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் வருமானத்தின் அளவு ஆகும். பொதுவாக ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள நபர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய தேவையில்லை. அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் அதன் வரம்பு ரூ.3 லட்சம் மற்றும் மிகவும் மூத்த குடிமக்களாக இருந்தால் அதன் வரம்பு ரூ.5 லட்சமாக இருக்கிறது. 

எனவே, சாதாரணமாக வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது, அதிக விலக்கு வரம்பின் வடிவத்தில் ரூ.50,000 கூடுதல் நன்மை மூத்த குடிமக்களுக்கு கிடைக்கிறது. கூடுதலாக மூத்தகுடிமக்களின் வருமானம், வரிக்கு உட்பட்ட வரம்புக்குக் குறைவாக இருந்தால் மற்றும் அவை டி.டி.எஸ் வங்கியின் நிலையான வைப்பு (எஃப்.டி) வட்டிக்கு கழிக்கப்படுகிறது என்றால், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதன் மூலமோ அல்லது 15G/H படிவத்தை தாக்கல் செய்வதன் மூலமோ டி.டி.எஸ்ல் கழிக்கப்படும் பணத்தை திரும்பப் பெறலாம்.

சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரிச்சலுகை

ஒரு மூத்த குடிமகன் வரிச்சலுகைக்கு தகுதியுடையவர் என்பதால் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் ஆண்டு பிரீமியத்திற்கு ரூ. 50,000 வரை செலுத்தப்படுகிறது. அதாவது, ஒரு மூத்த குடிமகனால் ஒரு வருடத்தில் செலுத்தப்படும் மருத்துவ காப்பீடு தொகையில், ரூ.50,000 வரையிலான தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன் கீழ் விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, ஒரு மூத்த குடிமகன் தனது பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துகிறார் என்றால், அந்த தொகைக்கும் ரூ.50,000 வரை கூடுதல் விலக்கு கோரலாம்.

முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை

வருமான வரி சட்டத்தின் பிரிவு 208 இன் படி, ஆண்டுக்கான வரி பொறுப்பு ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் ஒவ்வொரு நபரும், "அட்வான்ஸ் டாக்ஸ்" வடிவத்தில் முன்கூட்டியே வரியை செலுத்துவார்கள். இருப்பினும், பிரிவு 207-ன் படி மூத்த குடிமகனுக்கு முன்கூட்டியே வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரிவின் படி, ஒரு குடியுரிமை பெற்ற மூத்த குடிமகனுக்கு தொழில் அல்லது தொழிலில் இருந்து வருமானம் இல்லாததால் முன்கூட்டியே வரி செலுத்த முடியாது என்று வருமான வரி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கலை ஆவணம் மூலம் மேற்கொள்ளுதல்

வருமான வரி தாக்கல் செய்யும் போது, படிவம் ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4 ஆகியவற்றில் வருமானத்தை தாக்கல் செய்யும் மிகவும் மூத்த குடிமகன் தனது வருமானத்தை கணிணி முறையில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆவண முறையில் அல்லது கணிணி முறையில் என எதை வேண்டுமானாலும் தேர்தெடுக்கலாம்.

Also read... Gold Rate | அதிரடியாக‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?வட்டி வருமானத்தில் நன்மைகள்

வருமான வரிச் சட்டம் பிரிவு 80TTB-ன் படி, மூத்த குடிமக்கள் சம்பாதித்த ரூ. 50,000 தொகை வரை வங்கிகள் அல்லது தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளிடமிருந்து வைப்புத்தொகையின் வட்டி வருமானத்தின் அடிப்படையில் கிடைக்கும் வரி சலுகைகள் தொடர்பான விதிகளை வழங்குகிறது. சேமிப்பு வைப்புத்தொகை மற்றும் நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றில் ஈட்டப்பட்ட வட்டி, இரண்டும் இந்த விதியின் கீழ் கழிக்க தகுதியுடையவை.

அதேபோல, வருமான வரிச் சட்டம் பிரிவு 194 ஏ-வின் பிடி, ஒரு மூத்த குடிமகனுக்கு ரூ .50,000 வரை வட்டி செலுத்துவதிலிருந்து வங்கி அல்லது தபால் அலுவலகம் அல்லது ஒரு கூட்டுறவு வங்கி மூலமாக எந்தவொரு வரியும் கழிக்கப்படக்கூடாது என்பதற்கான விதிகளை வழங்குகிறது. எனவே ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக வரம்பு கணக்கிடப்பட வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published: