Home /News /business /

தொழில்நுட்ப பணிகளில் ஆண்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் - ஆய்வில் தகவல்..

தொழில்நுட்ப பணிகளில் ஆண்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் - ஆய்வில் தகவல்..

மாதிரி படம்

மாதிரி படம்

Job | தொழில்நுட்ப பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்கையில், ஏறத்தாழ 37 சதவீத பணிகளுக்கான நேர்காணலில் ஆண்களுக்கு மட்டுமே நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

    தொழில்நுட்ப பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்கையில், ஏறத்தாழ 37 சதவீத பணிகளுக்கான நேர்காணலில் ஆண்களுக்கு மட்டுமே நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஹையர்டு என்ற வேலைவாய்ப்பு தகவல் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

    தற்போதைய சூழலில் பெரும்பாலான பணிகளில் பாலின சமத்துவம் நிலவி வந்தாலும், தொழில்நுட்ப வேலைகளில் பாலின சமத்துவம் இல்லை என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தொழில்நுட்ப பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் பெண்களின் விண்ணப்பம் கூட பரிசீலனை செய்யப்படுவதில்லை என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

    தொழில்துறையின் பணிச்சூழல் குறித்து ஆய்வு

    நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஹையர்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. குறிப்பாக பணி சூழல், அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கான முயற்சி, ஊதிய வேறுபாடு, தொடக்க நிலை ஊதியத்தில் பல்வேறு ஊர்களுக்கு இடையே நிலவும் வேறுபாடு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    Also Read : புதிய தொழிலாளர் நல சட்டங்களில் ஊதிய விகிதம், பணி நேரம், விடுப்பு போன்ற விதிகளில் விரைவில் மாற்றம்


    இதுகுறித்து ஹையர்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜோஷ் பிரென்னர் கூறுகையில், “நாங்கள் வெளியிட்டுள்ள ஆய்வில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் என்பது, தொழில்துறையில் ஏற்கனவே உள்ள பாகுபாடுகள் குறித்துதான் பேசுகிறது என்றாலும் கூட, கடந்த ஆண்டு இந்த பாகுபாடு சற்று குறைந்துள்ளது.

    அதாவது முன்பு தொழில்நுட்ப பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்கையில் 42 சதவீதம் அளவுக்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    2020ஆம் ஆண்டில் ஆண்களை ஒப்பிடுகையில் 7.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்திருந்தது என்ற நிலையில், 2021ஆம் ஆண்டில் 13.2 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஊதிய பாகுபாடு குறைந்துள்ளது

    இனம் மற்றும் பாலின அடிப்படையில் நிலவி வந்த ஊதிய பாகுபாடு என்பதும் 2021ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. அதே சமயம், கறுப்பின பெண்களுக்கு ஊதிய பாகுபாட்டில் இருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    இன்னும் சொல்லப் போனால், வெள்ளை இன ஆண்களை ஒப்பிடுகையில், முனு 94 செண்ட் குறைவான ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த கறுப்பின பெண்கள் தற்போது 92 செண்ட் குறைவாக பெறுகின்றனர். ஆனால், வெள்ளை இன பெண்களுக்கு 93 முதல் 95 செண்ட் அளவில் ஊதியம் கிடைக்கிறது.

    தொடக்கநிலை ஊதியம்

    தொடக்கநிலை ஊதியத்தை பொறுத்தளவில், ஆண்களை ஒப்பிடும்போது குறைவான ஊதியம் பெறும் பெண்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 66.4 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 61.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. வெள்ளை இன மக்களைக் காட்டிலும் கறுப்பின மக்கள் 1.8 சதவீதம் குறைவான ஊதியம் பெறுகின்றனர்.

    முன்னதாக, 2018ஆம் ஆண்டு முதல் 2021 டிசம்பர் வரையிலான தரவுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 8,19,000 நேர்காணல் அழைப்புகள், 3,900 நிறுவனங்கள் மற்றும் 1,20,000 வேலை தேடும் நபர்கள் ஆகியோரின் தரவுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Business, Job

    அடுத்த செய்தி