ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டில் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநிலங்களின் 58 கூட்டுறவு வங்கிகள் வருகின்றன எனவும் 1,540 கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடிக்கும் மேற்பட்ட வைப்புத் தொகையாளர்களின் 4,84,000 கோடி ரூபாய் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும், உத்தரபிரதேசத்தில் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும், கால்நடை வளர்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.