நிதி பற்றாக்குறையா? இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்!

பணம்

உங்கள் பி.எஃப் சேமிப்பில் இருந்து 75% பணத்தை அல்லது உங்கள் மூன்று மாத சம்பளத்தை ‘கொரோனா உரிமைகோரல்’ வழியாக விண்ணப்பிப்பதன் மூலம் எளிதாக பெறலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீங்கள் நிதி பற்றாக்குறையால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியத்தின் (ஈ.பி.எஃப்) உறுப்பினராக இருந்தால், இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

இப்போது உங்கள் பி.எஃப் சேமிப்பில் இருந்து 75% பணத்தை அல்லது உங்கள் மூன்று மாத சம்பளத்தை ‘கொரோனா உரிமைகோரல்’ வழியாக விண்ணப்பிப்பதன் மூலம் எளிதாக பெறலாம். இதனால், எதிர்பாராத விதமாக வரும் நிதி சிக்கலைகளை உங்களால் சமாளிக்க முடியும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, அனைத்து கொரோனா உரிமைகோரல்களுக்கும் லாக்-இன் பீரியட் என்பது கிடையாது. அதாவது உங்கள் பி.எஃப் கணக்கு சில மாதங்களுக்கு முன்பே ஓபன் செய்யப்பட்டிருந்தாலும் கூட இந்த பணத்தை நீங்கள் எடுக்க முடியும்.

இதுதவிர வேறு ஏதேனும் காரணத்தால் பி.எஃப் பணத்தை வித்ட்ரா செய்ய நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தாலும் அல்லது உங்கள் கடன் கோரிக்கைகள் ஏதேனும் நிலுவையில் இருந்தாலும் கூட கோவிட் -19 உரிமைகோரலுக்கு நீங்கள் தாக்கல் செய்யலாம். KYC விவரங்களை பூர்த்தி செய்த அனைத்து PF கணக்குகளும் விண்ணப்பித்த 72 மணி நேரத்திற்குள் கொரோனா நிதியைப் பெறுகின்றன. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் கொரோனா நிதியை ஆன்லைனில் எவ்வாறு பெறலாம் என்பது பற்றி பின்வருமாறு தெரிந்துகொள்ளுங்கள்.

1. முதலில், உங்கள் UAN எண் செயலில் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் பிஎஃப் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. உங்கள் UAN கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்லை https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலில் உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.

3. திரையின் வலது பக்கத்தில், உங்களது பணியாளர் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மேனேஜ் டேபை தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்த பக்கத்தில், ஆன்லைன் சேவைகள் (online services) டேப்பிற்கு சென்று படிவம் (31, 19, 10 சி மற்றும் 10 டி) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

5. அடுத்ததாக உங்கள் மொபைல் எண் விவரங்களை நீங்கள் சரிபார்க்கலாம். மேலும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்கலாம்.

6. அடுத்த பக்கத்தில், படிவம் எண் 31 ஐத் தேர்ந்தெடுத்து, ‘நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்’ (I want to apply for’) என்பதைத் செலக்ட் செய்ய வேண்டும். நீங்கள் இப்போது ‘ஆன்லைன் உரிமைகோரலுக்கு தொடரவும்’ (Proceed for online claim) என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

Also read... கொரோனாவில் இருந்து மீண்டவரா நீங்கள்? உங்களுக்கு NO இன்சூரன்ஸ் பாலிசி

இதுதவிர உமாங் ஆப் மூலமாகவும் கோவிட் உரிமைகோரல்களை தாக்கல் செய்யலாம். நீங்கள் அதை எவ்வாறு தாக்கல் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

1. உங்கள் மொபைலில் நீங்கள் உமாங் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து EPFO விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. அதில் ‘அட்வான்ஸ் கோரிக்கை (கோவிட் -19)’ (Request for Advance (Covid-19)) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. பிறகு உங்கள் UAN கணக்கு விவரங்களை உள்ளிட்டு அவற்றை OTP மூலம் சரிபார்க்கவும்.

4. உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்.

5. பின்னர் ‘தொடரவும்’ (Proceed) என்பதைத் கிளிக் செய்யவும், அடுத்த கட்டத்தில் உங்கள் முகவரியை உள்ளிடவும்.

6. இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் வெற்று காசோலையை பதிவேற்றவும்.

அவ்வளவு தான் மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் PF பணத்தை அட்வான்ஸாக பெறலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: