Home /News /business /

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் சாதனைப் பயணத்தை மக்களுக்கு காட்டிய ‘Asian Paints Where The Heart Is’ நிகழ்ச்சி..

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் சாதனைப் பயணத்தை மக்களுக்கு காட்டிய ‘Asian Paints Where The Heart Is’ நிகழ்ச்சி..

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் வீட்டிற்கே அழைத்துச் சென்று அவரின் பெருமைகளை உணர்த்திய ‘Asian Paints Where The Heart Is’ நிகழ்ச்சி .

  தெற்கு மகாராஷ்டிராவில் உள்ள சங்லி என்ற அழகிய  நகரத்தில் பிறந்தவர் தான், சர்வதேச கிரிக்கெட் சின்னமான ஸ்மிருதி மந்தனா. இந்த மகளிர் தினத்தில், ‘Asian Paints Where The Heart Is’ இன் நான்காவது சீசன்,உங்களை ஸ்மிருதியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது.இவரது இல்லம், கிரிக்கெட் அரங்கத்தின் பிரகாசமான விளக்குகளுக்கு எதிராக அமைந்த ஒரு அமைதியான பெவிலியன்.

  குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக நேரம் செலவழிக்கும், பகிரப்பட்ட இடமே வீட்டின் லிவ்விங் ரூம்:சீட்டு விளையாட்டுகள் இங்கு பிரதானமானவை,மேலும் இங்கு கிரிக்கெட் போட்டிகளைக் காண ஒரு ப்ரொஜெக்டர் உள்ளது. ஸ்மிருதி,மிகச் சிறிய வயதிலிருந்தே தொழில் ரீதியாக கிரிக்கெட் விளையாட விரும்பும் பெண்களுக்கு, தனது சுத்த தைரியத்துடனும், உறுதி மனப்பான்மையுடனும் வழி வகுத்து வருகிறார். தமது நகரத்தில், கிரிக்கெட் பயிற்சி செய்ய அவசியமான ஒரு சரியான சிமென்ட் விக்கெட் இல்லாததால், பெற்றோரின் ஆதரவையும் ஊக்கத்தையும் கொண்டு, 16 வயதில் தனது வருமானத்தில் பெரும்பகுதியை  முதலீடு செய்து, தனக்கும்  விளையாட்டைப் பயிற்சி செய்ய விரும்பும் மற்றவர்களுக்கும் அவரே கட்டமைத்து கொண்டதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கதையை அவர் பகிர்ந்து கொள்கிறார்

  இந்நிகழ்ச்சியில், ஸ்மிருதி மற்றும் அவரது வாழ்க்கை மீது ஒரு தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது: அவரது இல்லத்தில், தற்போது ஒரு உடற்பயிற்சி கூடமாக இருக்கும் ஒரு தொலைக்காட்சி அறை, புகைப்பட படப்பிடிப்புக்காகவே எளிய ஸ்டுடியோ ஒன்றிற்காக அமைக்கப்பட்ட ஒரு கடினமான சுவர் உள்ளன மற்றும் லிவ்விங் ரூமில் ஒரு சுவர் முழுவதும் அவரது கோப்பைகள் குவிந்துள்ளன. அவரது சாதனைகளில் அவரது குடும்பத்தினர் கொள்ளும் பெருமையையும், அவரது வாழ்க்கைக்கான அவரது பார்வையில், குடும்பத்தினர் எவ்வாறு ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதையும் காண்பது ஒரு அழகான தருணமாக இருந்தது.

  ஸ்மிருதி மந்தனாவின் வீடு அவரது ஒழுக்கம் மற்றும் திறமைக்கு மட்டுமல்ல, அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையிலான அன்பு மற்றும் பாசத்தின் உண்மையான சான்றாகும். சீசன் 4 உடன் மீண்டும் வரும், ​​மிகவும் எதிர்பார்க்கப்படும், ரசிக்கப்படும் மற்றும் ஒரிஜினல் வெப் தொடரான ​​‘Asian Paints Where The Heart Is’ இன்  2 ஆவது எபிசோடில், சிறந்த கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி, அவரது வீட்டின் ஒரு பிரத்யேக டூர் அளிப்பதை காணுங்கள்.

  Where The Heart Is-சீசன் 4 ,எபிசோட் 2:


  https://www.youtube.com/watch?v=XcUz85xe_qQ

   

  ‘Asian Paints Where The Heart Is’ சீசன் 4:.

  ‘Asian Paints Where The Heart Is’ இன் நான்காவது சீசன், பார்வையாளர்களை மிகவும் புகழ்பெற்ற ஏழு பிரபலங்களின் ஏழு தனித்துவமான அழகான வீடுகளின் பிரத்யேக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்.  இந்த ஆண்டு சங்கர் மகாதேவன், அனிதா டோங்ரே, ஸ்மிருதி மந்தனா, தமன்னா பாட்டியா, ராஜ்குமார் ராவ், பிரதீக் குஹாத் மற்றும் அவரது உடன்பிறப்புகள், சக்தி மற்றும் முக்தி மோகன் போன்றவர்கள், அவர்களது வீட்டின் கதவுகளைத் திறந்து, தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு பார்வையாளர்களுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பை ஏற்படுத்த இருக்கிறார்கள்.Asian Paints இதுவரை, 27 பிரபலங்களை சந்தித்து, நமக்கு 22 அற்புதமான இல்லங்களை  காட்சிப்படுத்தியதால்,கடந்த மூன்று ஆண்டுகளில் 250 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, நிகழ்ச்சிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பினை உருவாக்கியுள்ளது,

  சீசன் 4 நிகழ்ச்சிக்கு சில புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. இந்த சீசன், பிரபலங்கள் மற்றும் அவர்களது வீடுகளின் ஆடம்பரமான அலங்கார கதைகளுக்கு பார்வையாளர்களை அறிமுகப்படுத்தும். இடம்-முதல் அணுகுமுறையுடன், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் இல்லத்தை காணலாம்: இது வீட்டின் பிரமாண்டமான அலங்கார நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஒரு தைரியமான மாற்றமாக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய மாற்றமாக கூட இருக்கலாம். இந்த புதிய சீசன் இப்பிரபலங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது உண்மையான, அன்பு நிறைந்த இல்லத்தில், அவர்களுக்கு மட்டுமே உரியதான இடம், அவர்களுடைய மனதுடன் ஆழமாக எதிரொலிக்கும் மற்றும் அவர்களின் உண்மையான சுயத்தை பிரதிபலிக்கும் இடத்தின் அழகை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, பார்வையாளர்கள், ஊரடங்கின் போது பிரபலங்கள் அவர்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகள் குறித்தும், அவர்களின் குடும்பம், ஒற்றுமை பற்றிய கருத்து மற்றும் இந்த புதிய உலகில், ஒரு இல்லத்திற்கான அர்த்தமாக அவர்களுக்கு தோன்றுவது என்ன என்பதை பகிர்வதை காணலாம். இந்த நிகழ்ச்சி உறவுகளின் அழகையும், ஒரு இல்லத்திற்கான பகிரப்பட்ட அன்பு எவ்வாறு உறவுகளை பலப்படுத்துகிறது என்பதையும் காட்டும். மேலும் இந்த பிரபலங்களிடமிருந்து, ஒரு வீட்டை அலங்கரிப்பதற்கான சில உணர்ச்சிகரமான யோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகளையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

  இந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்களுக்காக, சீசன் 4 ஒரு புதிய மற்றும் அற்புதமான அம்சத்தைக் கொண்டுவருகிறது, இதில் ஒவ்வொரு  எபிசோடிற்கும் ஒரு அதிர்ஷ்ட பார்வையாளர், பிரபலங்களுக்கு சொந்தமான ஒரு சிறப்பு பரிசை வெல்வார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Women achievers

  அடுத்த செய்தி