Home /News /business /

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு....... நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை செய்யுங்கள்

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு....... நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை செய்யுங்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவில் நிதி மோசடிக்கான பொதுவான வழிமுறைகளை அறிந்து கொள்வதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவை பொறுத்தவரை வங்கி மோசடி தொடர்பான வழக்குகளின் மொத்த மதிப்பு 17.42 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 7.62 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கித்துறைகள் இந்த அறிவிப்பை கொண்டாடினாலும், இதனால் வங்கி தொடர்பான மோசடிகள் குறையவில்லை என்ற ஷாக்கிங் தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது வங்கி ஆன்லைன் மோசடியால் பதிக்கப்பட்டு பணத்தை இழந்ததாக வெகு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளதாக நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது நிதி மோசடிகள் அதிகரிக்க காரணமாக அமைவதோடு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக மோசடிக்கு ஆளாகும் நுகர்வோர் இதுகுறித்து முறையாக புகார் அளிக்க முன்வாரத வரையில், இதுபோன்ற மோசடிகளை தடுக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இருப்பினும், மோசடி வழக்குகளின் பண மதிப்பீடு குறைந்திருந்தாலும், 2022 நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கி வங்கித் துறையில் இதுவரை 9,103 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2018ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 27 முதல் 35 வயதுக்குட்பட்ட 25 சதவீதம் பேர் வங்கி பரிவர்த்தனைகளின் போது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானாவை வங்கி ஏடிஎம்-கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின் போது நடந்துள்ளன. 2016ம் நிதியாண்டில் மட்டும் நிதி மோசடி தொடர்பாக 12 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும் போதும் 36 சதவீதம் அதிகமாகும்.

    kotak mahindra bank fd fixed deposit interest rate increased kotak

    இந்தியாவில் நிதி மோசடிக்கான பொதுவான வழிமுறைகளை அறிந்து கொள்வதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் எந்த விதத்திலும், எந்த வேடத்திலும் ஏமாற்றலாம் என்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். நிதி மோசடி பற்றி விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கான சில வழிகளை கீழே கொடுத்துள்ளோம்...

    1. முன்கூட்டியே அலர்ட் ஆக இருப்பது:

    வங்கி மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கான சரி வழி என்னவென்றால், நமது வங்கி கணக்கு மற்றும் அதனை நாம் கையாளும் முறை குறித்து முன்கூட்டியே ஆய்வு நடத்தில் அபாயகரமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். வங்கி கணக்கில் பெருந்தொகையை வைத்திருப்போர், கணக்கை ஹேக்கர்கள் எளிதில் ஹேக் செய்யும் வகையில் எதையும் செய்யக்கூடாது.

    Also Read : ரூ.12,000 க்கு கீழ் விற்கப்படும் சீன செல்ஃபோன்களுக்கு தடை? - மத்திய அரசு திட்டம் எனத் தகவல்

    அதாவது பாதுகாப்பு வசதிகள் அதிகமில்லாத பழைய கம்யூட்டரில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை செய்வது, வங்கி தொடர்பான பாஸ்வேர்டு போன்ற விவரங்களை சேமித்து வைப்பது, எளிதில் யூகிக்கும் வகையில் ஏடிஎம் பாஸ்வேட்டை வைத்திருப்பது ஆகிய தவறுகளை வங்கி வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டும்.

    2. வங்கி ஊழியர்களுக்கு பயிற்சி:

    வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல வங்கிகளும் நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க, புதிது புதிதாக அப்டேட் ஆகிவரும் ஆன்லைன் மோசடிகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு ஆன்லைன் மோசடி மற்றும் அதனை தடுப்பது தொடர்பாக 6 மாதம் முதல் 12 மாதம் வரை அவ்வப்போது பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும் வங்கி ஆப்களை அவ்வப்போது அப்டேட் செய்வது, ஆன்லைன் பேங்கிக் டிஜிட்டல் பாதுகாப்புகளை வலுப்படுத்துவது, திறமையான சைபர் க்ரைம் பாதுகாப்பு குழுவை பயன்படுத்துதல் போன்றவற்றை வங்கிகள் பின்பற்றினால் ஆன்லைன் நிதி மோசடிகளை தடுக்க முடியும்.



    3. இணைய பாதுகாப்பு நடைமுறைகள்:

    தற்போது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை சேமித்து வைக்க கிளவுட் நல்ல ஆப்ஷனாக மாறியுள்ளது. இது ஹேக்கர்களிடம் இருந்து தரவுகளை பாதுகாப்பதோடு, தரவை அணுகும் நபர்கள் தங்களது சரியான அடையாளத்தை உள்ளீடு செய்தால் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் இரட்டை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

    4. வெளிநாட்டு சொத்து கட்டுப்பாடு அலுவலகம்:

    வெளிநாட்டில் சொத்து வாங்குதல், பங்குதாரர்களுடன் இணைந்து வெளிநாட்டில் தொழில் ஆரம்பிப்பது போன்றவற்றை வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) மூலம் இணைக்க வேண்டும். இது ஏற்கனவே உள்ள உங்கள் பெயர் மற்றும் முகவரிகளுடன் முழு தரவுகளையும் OFAC தளத்தில் இணைக்க பயன்படுகிறது.

    5. நிதிமோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்:

    வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பரிவர்த்தனையில் மோசடி நடக்காமல் தடுக்க வலுவான மென்பொருளை பயன்படுத்துவது, அவ்வப்போது தணிக்கை நடவடிக்கைகள், சாப்ட்வேர் அப்டேஷன், பாஸ்வேர்ட்டை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றுவது மற்றும் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தலாம். ஆனால் இவை அனைத்தையும் விட நிதி மோசடிகள் எவ்வாறு நடைபெறுகிறது?, அதில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எவ்வாறு காக்க வேண்டும்?, ஆன்லைன் பேக்கிங் மோசடிகள் என்னென்ன? போன்றவை குறித்து அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Bank

    அடுத்த செய்தி