கடும் வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் - சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

இந்திய அரசின் அறிக்கையின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது.

கடும் வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் - சர்வதேச நாணய நிதியம் அறிக்கை
சர்வதேச நாணய நிதியம்
  • News18
  • Last Updated: September 13, 2019, 2:21 PM IST
  • Share this:
எதிர்பார்த்ததைவிட கடுமையான வீழ்ச்சியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்ப்பரேட் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் என பலவற்றுக்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது. 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் வலிமையற்றதாகவே இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

ஆனாலும், சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது சீனாவைவிட நல்ல வளர்ச்சியைப் பெறும் நாடாகவே இருக்கும் என்று வாஷிங்டன்னைச் சேர்ந்த சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் அறிக்கையின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது.


இந்தியப் பொருளாதார மந்தநிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் கூறுகையில், “எதிர்பார்த்தைவிட இந்தியப் பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கூடுதல் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களை வருகிற சர்வதேச பொருளாதார அவுட்லுக் மூலம் தெரியப்படுத்துவோம்” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: மூன்று மாதங்களில் ₹12 லட்சம் கோடி நஷ்டம்- வேதனையில் இந்திய முதலீட்டார்கள்

பொருளாதார மந்த நிலை - சாமானியர்கள் எதிர்கொள்வது எப்படி?
First published: September 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்