ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக குறையும் - சர்வதேச செலாவணி நிதியம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக குறையும் - சர்வதேச செலாவணி நிதியம்

IMF (Reuters)

IMF (Reuters)

சுபஸ்ரீ வழக்கில் தவறிழைக்கவில்லை என்றால் ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் ஜெயகோபாலை நோக்கி கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாக குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. இதேபோல, உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில், 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. நுகர்வு, முதலீடு, ஏற்றுமதி ஆகியவை குறைந்துள்ளன.

இந்நிலையில், சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எஃப், சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டது.

நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் மதிப்பிட்ட நிலையில், இதனை 7 சதவீதமாக கடந்த ஜூலை மாதத்தில் குறைத்தது. இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 6.1 சதவீதமாக இருக்கும் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறைகளில் நிலையற்ற தன்மை, வங்கி அல்லாத நிதித்துறையின் மோசமான நிலை, தேவை குறைவு ஆகியவையே இதற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, 2019-20-ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 3 சதவீதமாக குறையும் என்றும், சர்வதேச அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டபிறகு, மிகவும் குறைந்த அளவிலான வளர்ச்சியாக இது இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்க உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டை நாங்கள் மீண்டும் குறைத்து 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கிறோம். சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து இது மிகவும் குறைவான வளர்ச்சியாக இருக்கும். 2020-ம் ஆண்டில் ஓரளவு முன்னேற்றம் பெற்று 3.4%-ஆக இருக்கும். எனினும், இது கவலைக்குரியதாகவே உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 2.4 சதவீதமாகவும், 2020-ம் ஆண்டில் 2.1 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றதைவிட சிறிது அதிகமாகும். இதேபோல, சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாகவும், 2020-ம் ஆண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Published by:Sankar
First published:

Tags: IMF, Indian economy