நடப்பு நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% லிருந்து FY24 இல் 6.1% ஆக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
ஐஎம்ஃப் அறிக்கையின் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பணவீக்கம் படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கிறது. அதோடு மீண்டும் பரவ தொடங்கியுள்ள கொரோனா வைரசால் உலக நாடுகளின் வர்த்தகம் பாதிக்கும் என்று IMF எச்சரித்துள்ளது.
அதோடு சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் கூறுகள் அதிகமாகவே உள்ளன. உக்ரைனில் நடக்கும் போர்,ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், அவர்களிடம் இருந்து வாங்கும் எண்ணையின் மதிப்பு உயர்வு, நிச்சயமற்ற வர்த்தக உந்துதல் உட்பட பல வழிகள் மூலம் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படும் என்று IMF அறிக்கை கூறுகிறது.
IMFஅதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியதில் இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி 6% என மதிப்பிட்டுள்ளது. ஆனால் அரசு மூலதனச் செலவுகள் மற்றும் தனியார் தேவை ஆகியவற்றின் பின்னணியில் FY23 இல் 7% GDP வளர்ச்சியை எட்ட முடியும் என்று இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஷாப்பிங்கில் அதிகரிக்கும் மோசடிகளும்.. தடுக்கும் வழிமுறைகளும் - முழு விபரம்!
இந்தியாவின் நீண்ட கால பணவீக்க எதிர்பார்ப்புகள் ஒப்பீட்டளவில் நன்கு தொகுக்கப்பட்டிருந்தாலும் எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை அதிர்ச்சிகளால் நிதிநெருக்கடி ஆபத்து அதிகமாக உள்ளது என்று IMF எச்சரித்தது.
பணவீக்கத்தை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு டிசம்பர் 7 அன்று வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இதனால் வரும் 2 ஆண்டுகளில் பணவீக்கத்தை அளவு குறையலாம் என்றும் IMF கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தில் (CBDC), போட்டியிடக்கூடிய தனியார் வழங்குநர்களின் இருப்பு நன்மைகளை மட்டுப்படுத்தலாம் மற்றும் CBDC ஐ ஏற்றுக்கொள்வதற்கான செலவை நியாயப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று அது கூறியது.
இதையும் படிங்க: உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதா..? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
எனவே, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சைபர் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் போன்ற முக்கியமான அபாயங்கள், செயல்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று IMF அறிக்கை கூறியது.
கார்ப்பரேட் மற்றும் நிதித்துறை இருப்புநிலைகள் மேம்பட்டிருந்தாலும், வட்டி விகிதங்களின் அதிகரிப்புடன் செயல்படாத சொத்துக்கள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் போன்ற நிதி நிலைமைகளை இறுக்குவதால் ஏற்படும் அபாயங்கள், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கவும் IMF அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IMF, India growth, Inflation