Home /News /business /

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.3 சதவீதமாகக் குறைத்த ஐஎம்எஃப்!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.3 சதவீதமாகக் குறைத்த ஐஎம்எஃப்!

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

இந்தியாவின் ஜிடிபி 2020-2021 நிதியாண்டில் 7.5 சதவீதம் என்ற இலக்கை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் 2019-2020 நிதி ஆண்டில் 7.5 சதவீத ஜிடிபி வளர்ச்சியை இந்தியா பெறும் என்று கணித்திருந்ததை 7.3 சதவீதமாக குறைத்துள்ளது.

    அதே நேரம் இந்தியாவின் ஜிடிபி 2020-2021 நிதியாண்டில் 7.5 சதவீதம் என்ற இலக்கை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

    மத்திய புள்ளியியல் அலுவலகமும் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக உள்ளது என்றும் 2018-2019 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்திருந்தது.

    சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதற்கான காரணமாக உள்ளது. அமெரிக்கா, சீனா இடையில் ஏற்பட்டு வரும் வர்த்தகப் போர், ஐரோப்பிய ஒன்றியத்தில் எழுந்துள்ள பிரிக்ஸிட் சிக்கல் போன்றவையால் சர்வதேச அளவில் எல்லா நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றன.

    “சர்வதேசச் சந்தையில் உள்ள பொருளாதார சிக்கல்கள் சீராகும் போது இந்தியப் பொருளாதாரமும் சீராகும். இந்தியா தற்போது வாங்கும் திறனால் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுவே ஏற்றுமதி அதிகரிக்கும் போது ஜிடிபி வேகமாக வளர்ச்சியை அடையும்” என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

    மேலும் பார்க்க:




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Tamilarasu J
    First published:

    Tags: GDP, Indian economy, International monetary fund

    அடுத்த செய்தி