இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சர்வதேச நிதி ஆணையம்

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சர்வதேச நிதி ஆணையம்
  • Share this:
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நுகர்வு திறன், முதலீடுகளில் சரிவை சந்தித்திருப்பதுடன் வரி வருவாய் குறைந்துள்ளதால் உலகின் அதிவேக வளர்ச்சியை கொண்ட இந்திய பொருளாதாரத்திற்கு தடை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆண்டு ஆய்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோரை ஏழ்மையில் இருந்து மீட்டெடுத்திருக்கும் இந்தியா, தற்போது பொருளாதார மந்தநிலையில் சிக்கியிருப்பதாக அந்த அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய அதிகாரி ரணில் சல்கடோ தெரிவித்துள்ளார்.


தற்போதைய வீழ்ச்சியில் இருந்து மீண்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க பொருளாதார கொள்கை சார்ந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை தொடரும்பட்சத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு புத்துயிரூட்டுவதுடன் நிதித்துறையை மறுகட்டமைப்பு செய்வது அவசியம் என்றும் சல்கடோ அறிவுறுத்தியுள்ளார்.அதீதகடன் மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் காரணமாக, அரசுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்