Home » News » Business » ILTAKECARE APP FROM CICI LOMBARD SAN

வாடிக்கையாளர்களுக்கு நலப்பராமரிப்புத் தீர்வை வழங்கும் ICICI Lombard-ன் ILTakeCare app செயலி

மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய ILTakeCare செயலியை நமக்கு ICICI அறிமுகப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்களுக்கு நலப்பராமரிப்புத் தீர்வை வழங்கும் ICICI Lombard-ன் ILTakeCare app செயலி
ICICI
 • News18
 • Last Updated: September 2, 2020, 5:49 PM IST
 • Share this:
நாம் அறிந்த உலகம் முற்றிலும் மாறிவிட்டது. நமக்குப் பல் வலிக்கிறது அல்லது, மிகுந்த காய்ச்சல் வருகிறது என்றால், சரியான நேரத்தில் மருத்துவரிடம் செல்ல இயலும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அனைத்து வயதைச் சேர்ந்த மக்களும் முடக்கம் காரணமாக மிகுந்த சோர்வு, தங்கள் நலனைப்பற்றிய கூடுதல் அழுத்தத்தைச் சந்தித்துவருகிற இன்றைய சூழ்நிலையில், அவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கலாம். எனினும், உலகம் தொடர்ந்து இயங்கத்தான் வேண்டும்.

ஆனால், ‘நாங்கள் உங்களைக் காப்பாற்றுகிறோம்' என்று எல்லாரும் முன்வருவதாகத் தோன்றுகிற இன்றைய சூழ்நிலையில், நீங்கள் யாரை நம்பவேண்டும்? இதைத் தீர்மானிப்பது மிக எளிது! உங்களை எப்போதும் ஆதரித்துவந்துள்ளவர்களைதான் நீங்கள் நம்புவீர்கள். ‘வாக்குகளைக் காப்பாற்றுவோம்' என்கிற தன்னுடைய குறிக்கோளை ICICI Lombard அழுத்தமாகப் பின்பற்றுகிறது, மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய ILTakeCare செயலியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
நாட்டின் மிக முதன்மையான பொதுக் காப்பீட்டு வழங்குநர்களுள் ஒருவரால் வழங்கப்படுகிற ஒரு தனித்துவமான தீர்வாகிய இந்தச் செயலி, ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் இந்த முடக்கத்தின்போது எப்போது வேண்டுமானாலும் (24x7) நலப்பராமரிப்புத் தொழில்முறை வல்லுனர் ஒருவருடன் ஒரு தொலைஆலோசனையைப் பெற அனுமதிக்கிறது. ILHelloDoctor வசதியின்மூலமாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் தகுதிபெற்ற ஓர் MBBS மருத்துவருக்கு இரண்டு அழைப்புகளை நிகழ்த்தலாம், எந்தவொரு நலப் பிரச்னையையும் விவாதிக்கலாம். அதற்கான வாய்ப்பை இந்தச் செயலி வழங்குகிறது. மிகப் பெரிய, மிகவும் நம்பகமான காப்பீட்டுப் பிராண்ட்களில் ஒன்று என்றமுறையில், இது ஒரு வியப்புக்குரிய செயல்பாடாகும், வாடிக்கையாளர் நலனை அவர்கள் எந்த அளவு முதன்மையாகக் கருதுகிறார்கள் என்பதை இது காண்பிக்கிறது.

மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன, நம் மருத்துவர்களை நம்மால் அணுக இயலவில்லை, இந்தச் சூழல் நம்மை உதவியற்றவர்களைப் போல் உணரச் செய்யலாம். ஆனால், நம்முடைய நலன்மீதான கட்டுப்பாட்டை HelloDoctor வசதி நமக்குத் திரும்ப அளிக்கிறது; முடக்கங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், தகுதி பெற்ற மருத்துவர் ஒருவரிடம் தொலை ஆலோசனை பெறுவதற்கு நம்மை அனுமதிக்கிறது. அறிகுறிகள், நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பற்றிய போதுமான தகவல்களை வழங்குவதன்மூலம் மருத்துவர் பிரச்னையைக் கண்டறியலாம், தேவைப்பட்டால், உங்களுக்கு ஒரு டிஜிட்டல் மருந்துச்சீட்டையும் வழங்கலாம்.

கூடுதல் சேவைஅனைவரும் பயன்படுத்தக்கூடிய இந்த வசதிகளுடன், ICICI Lombard பாலிசி வைத்திருப்போர் தங்களுடைய நலன், வண்டி, பயணக் காப்பீடு மற்றும் நலத் தேவைகளுக்கான தீர்வுகளை ஒரே இடத்தில் பெறுவதையும் ILTakeCare செயலி உறுதிசெய்கிறது. காலடிகளை எண்ணுவது, தூக்கத்தை அளவிடுவது போன்றவற்றில் தொடங்கி, ஊட்டச்சத்து வல்லுனர்கள், உடற்தகுதி வல்லுனர்களுடன் இணைய அரட்டை, உணவுப்பழக்க மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள்வரை அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய உதவிகரமான கருவிகள் இங்கு உள்ளன. உடல்நலம் தொடர்பான கேள்விகளில் நீங்கள் ஓர் இரண்டாம் கருத்தையும் பெறலாம்; உங்களுடைய கோரல்பற்றிய தகவல்களை வழங்கும் அறிவிப்புகளும் இங்கு உண்டு; இப்படி இன்னும் பல வசதிகள் ஒரே இடத்தில் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

Icici


இதுவரை நாம் பேசியவற்றைத் தொகுத்துச் சொல்வதென்றால், இந்தச் செயலியைப்பற்றிய தனித்துவமான முக்கிய அம்சங்களில் சிலவற்றை இங்கு காணலாம்:

 • HelloDoctor வசதியின்மூலம் மருத்துவர்களுடன் விரைவாகவும் எளிதாகவும் இணையலாம், உங்கள் பகுதியிலுள்ள நோய் கண்டறிதல் வசதிகள், மருந்துக்கடைகளுடனும் இணையலாம்.

 • உரிமம் பெற்ற ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு சந்திப்பைப் பதிவு செய்யலாம்; தொலைபேசிகளின் வழியே வரம்பற்ற அணுகலைப் பெறலாம்

 • கடையில் மருந்துகளைத் தள்ளுபடியில் பெறலாம்; அல்லது, அவற்றை உங்கள் வீடுகளுக்கே வரச்செய்யலாம்.

 • அருகிலுள்ள வலைப்பின்னல் நோய் கண்டறிதல் மையத்தில் உங்களுடைய பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம்.

 • உங்களுடைய நலப்பரிசோதனையைப் பதிவு செய்யலாம்

 • ICICI Lombardன் நலக் காப்பீட்டுடன் ரொக்கமில்லாத அங்கீகாரத்தைப் பெறலாம்

 • உங்கள் பாலிசி பலன்கள், தகுதி மற்றும் பரிமாற்றங்கள் அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து காணலாம்

 • நலப் பராமரிப்பு வழங்குநர்களை நீங்கள் பெறும் சேவைகளின் அடிப்படையில் விமர்சிக்கலாம், தர மதிப்பீடு வழங்கலாம், அதன்மூலம் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

 • உங்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் இணையத்தில், அல்லது 24-மணிநேர அழைப்பு மையத்தை அழைப்பதன்மூலம் திறமையுள்ள ஆதரவு, பராமரிப்பைப் பெறலாம்.


இந்தச் செயலிக்கு வந்துள்ள விமர்சனங்கள் அனைத்தும் நேர்விதமாக உள்ளன, எங்களுக்குப் பணிவுணர்வை வழங்குகின்றன, இதைப் பயன்படுத்துகிற மக்கள், தாங்கள் வீட்டுக்குள் சிக்கியிருந்தாலும் தங்களால் எத்தனையோ விஷயங்களைச் செய்ய இயலுகிறது என்று வியக்கிறார்கள். உங்களுடைய அனைத்துக் காப்பீட்டு, நலன் மற்றும் நல வாழ்வுத் தேவைகளுக்கு இது ஒரு மிகச் சிறந்த செயலி என்பதில் ஐயமில்லை.

Apple ஆப் ஸ்டோர் மற்றும் Google Play ஸ்டோர் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது, நீங்கள் இந்தச் செயலியை டவுன்லோட் செய்து நிறுவினால் போதும். உங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களைப்பற்றியும் சிந்தியுங்கள், அவர்களுடனும் இதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அதன்மூலம் நாம் அனைவரும் #RestartRight செய்யலாம்.

இப்போதே இந்தச் செயலியை டவுன்லோட் செய்யுங்கள்!

இது தொழிற்கூட்டாளி வழங்கும் ஒரு பதிவு.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading