ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல ஃபர்னீச்சர் விற்பனை நிறுவனமான ஐகியா இந்தியாவில் தனது மூன்றாவது கிளையை பெங்களூருவில் தொடங்கியுள்ளது. முதல் வாரத்தின் இறுதியிலேயே ஏராளமானோர் கடை முன் குவிந்து 3 மணி நேரம் வரிசை காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
ஐகியா ஃபர்னீச்சர் நிறுவனத்தின் முதல் கிளை 1958ம் ஆண்டு ஸ்வீடனின் Älmhult பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுவது 470 கிளைகளுடன் இயங்கி வருகிறது. அதிகபட்சமாக ஐரோப்பியாவில் 276 கிளைகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்தியாவில் மும்பை மற்றும் ஐதராபாத்தில் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.
இந்நிலையில், தனது மூன்றாவது கிளையை பெங்களூருவின் நாகசந்திரா பகுதியில் ஐகியா தொடங்கியுள்ளது. பெங்களூருவில் கிளையை தொடங்க திட்டமிட்டு ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை நடைபெற்றுவந்த சூழலில் கடந்த ஜூன் 22ம் தேதி ஐகியாவின் மூன்றாவது மற்றும் இந்தியாவின் மிகப்பெரியதான பெங்களூரு கிளை திறக்கப்பட்டது.
4.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த கிளையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களும் 1000 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிலான உணவகவும் உள்ளது. கடை திறக்கப்பட்ட முதன் வாரத்தின் விடுமுறை நாளான சனிக்கிழமை பல ஆயிரம் பேர் பொருட்களை வாங்குவதற்காக ஐகியா கிளையில் குவிந்தனர்.
இதையும் படிங்க: போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டத்தில் ரூ. 40 லட்சம் சேமிக்கலாம் தெரியுமா?
சுமார் 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்து அதன் பின் கடைக்குள் சென்று பொருட்களை அவர்கள் வாங்கி சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் வார இறுதியில் குறைந்த அளவிலேயே பயணிகள் வரத்து இருக்கும் நிலையில், ஐகியா கிளை தொடங்கப்பட்டதன் காரணமாக பயணிகள் வரத்து 2 மடங்கு அதிகரித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.